பிக் பாஸ் போயாச்சா ஜனனி அக்கா.

ஜனனி அக்கா

உங்க ஈழத்தம்பி பேசுறன்..

ஊரில சிவனேன்னு

சும்மா கிடந்த ஜனனி அக்கா

ஐ பி சி ஜனனி அக்கா ஆச்சு

இப்ப கடல் கடந்து

பிக் பாஸ் போயாச்சு.

அதுக்கு என்ன ஆச்சு

பேச்சு வேணாம்..

நாம ஈழத் தமிழங்களாச்சே

பாவப்பட்ட ஜென்மமாச்சே..!!

உங்க அக்கா அண்ணா

ஊருக்காய் மடிஞ்சப்போ

இந்த பிக் பாஸெல்லாம்

கிக் பாஸா அடிச்சாங்க..

இப்ப மட்டும் என்னே பாசம்

கூப்பிட்டு வைச்சு – உங்க

தமிழை கலாய்க்கிறாய்ங்க

ஏன்…

உங்களையே கலாய்க்கிறாய்ங்க..

கூடவே..

ஈழத்தை அசிங்கம் பண்ணுறாய்ங்க..

தேவையாக்கா இந்த பிழைப்பு நமக்கு..!!

ஏதோ போயிட்டீங்க

கடைசி வரைக்கும்

காசுக்காக நம்ம தமிழை மாத்திடாதேங்க

புகழுக்கா புழுப்போல் நெழியாதீங்க

உலகுக்கே அடங்காமல்

போராடி வீழ்ந்த இனம்

இறுமாப்பாய் நில்லுங்க

ஈழத்தமிழிச்சியாய்

அது பிக் பாஸ் ஆனான்ன

இமயம் ஆனான்ன…!!!

***—****—***

Leave a comment »

பொன்னியின் செல்வன் – வன்னியின் செல்வன்

கன்னத்தில் முத்தமிட்டு

ஈழ அவலத்தை குறைத்திரையில் இட்டு

‘மணி’ பார்த்த மணியருக்கு

கல்கிக் கடலில்

மூழ்கி முத்தெடுக்க

ஈழத்திட்டின்

வன்னிக் கோடியின் அனுராதபுரம்

கரைதட்டி இருக்கு.

—-

அண்மைக் காலத்தே

புலிக் கொடி ஒன்று

உயிராயுதமாய்

அனுராதபுரம் புகுந்து

நிஜக் கதை படைத்த போது

தூசி மண்டிக்கிடந்த

தமிழகத் திரைக் கண்கள்..

கல்கிக் கிழவனின்

கற்பனையில் வந்த

பொன்னியின் செல்வனால்

வன்னிச் செல்வன் முன்

திறந்து கிடக்குது..!! 

—-

மகிந்தனை வீழ்த்திய

மகிமையை பேசுது

சோழ வாரிசுகள்…

அனுராதபுரமோ

தமிழனை வீழ்த்திய

மகிந்தவின் கதை பேசி

சிங்கள வீரம் காட்டுது.

முரண்பாட்டுக்காய் அல்ல

தமிழினம் முரண்படா ஒற்றுமை ஒன்றுக்காய்

கடந்த காலம் மீளுமா…

ஈழமண்ணில்

தமிழ் ராச்சியம் அமையுமா..? 

ஏக்கமே

பொன்னியின் செல்வனில்

நிறைஞ்சு கிடக்குது..!!

—-

மணிகளும் ராஜாக்களும் திரைகளும்

ஈழக் களத்தின்

உண்மைக் கதை பேசுமா..?

ஈழக்கிழக்கு தான் விடியுமா..?

சோழப் பரம்பரை மீளுமா..

புலிக்கொடி தான் மீண்டும் வானேகுமா..??! 

மீண்டும் ஏக்கமே

தழுவி தொக்கி நிற்குது

பொன்னியின் செல்வனைக் காண்கையில்..!!

Leave a comment »

துவாரகா வா..

தேடி வரும்

சிங்கள ஆமியை

துரத்த வா என்றால்..

விழுந்தடிச்சு

விமானம் ஏறி…

இப்ப

குடும்பம் குடும்பமாய்

பெருகி..

சவரி முடியொடு

சர்வ மேக்கப்பும் வாங்கித் தந்து

தங்கள் பிள்ளைகள்

அழகோ அழகென்று

அண்டப்புளுகு புளுகி

அவற்கெல்லாம்

அத்தனை வசதிகளும்..

ஆடல் பாடலோடு

ஆயிரம் ஆயிரமாய் 

வீண் செலவிட்டு

செய்து வைக்கினம் கல்யாணம்…

அமைச்சுக் கொடுக்கினமாம் வாழ்வு

வெள்ளைக்காரனும் காரியும்

கூட மருமக்களாம்.

என் பிள்ளை

வாழ்ந்து தானே ஆகனும்

அவனுக்கு அவளுக்கு

வெக்கை தாங்காது

ஊருக்கு போனால்

பூச்சிக்குப் பயம்

வெயிலுக்கு வெளுத்திடுவம்

ச்சா..

கறுத்திடுவம் என்று

வகை வகையாய் திரவியங்கள்

வாங்கி தடவினம்.

வெள்ளைக்கு நிகராய்

வாழனும் நாங்களும்..

வாஸ்தவம் பேசும் கூட்டம்.

வந்தாள்.. அந்த மகள்

கார்த்திகை திங்கள் 27ம் நாள்

எவர் பெத்த மகளோ

எது உயிர்த்த பெண்ணே

ஆனாலும் உரித்துப் போட்டாள்

ஆயிரமாயிரமாய்

ஓநாய்கள் தோல்…!

மேக் கப் மாமி

பவுடர் மாமி

கூவுவோர் கையில்

கறுப்பு வெள்ளி

மலிவு விலை கூடையில் மேக் கப் 

குவியல் குவியலாய்..!

துவாரகா வா…

துருவி ஆராயினமாம்

இல்லையடா 

அவள்

இறுதிப் போர் வரை

கொண்ட இனத்துக்காய்

கொண்டை கூட 

கட்ட காலமின்றி

களம் கண்ட

அஞ்சா புலி மகள்..!

நிழல்

வெளுத்தது

உங்கள் சாயம்..!

போலியா அவள்

போலிகளே..

போட்ட வேடங்கள் களைந்தது

போங்கடா போங்க..!!

Leave a comment »

தலை தெ(த)றி..!

தலை தெறித்ததொன்று

தறிக்க..

தளிர்க்கவொன்று

தயவோடு..!!

Leave a comment »