Archive for Uncategorized

துவாரகா வா..

தேடி வரும்

சிங்கள ஆமியை

துரத்த வா என்றால்..

விழுந்தடிச்சு

விமானம் ஏறி…

இப்ப

குடும்பம் குடும்பமாய்

பெருகி..

சவரி முடியொடு

சர்வ மேக்கப்பும் வாங்கித் தந்து

தங்கள் பிள்ளைகள்

அழகோ அழகென்று

அண்டப்புளுகு புளுகி

அவற்கெல்லாம்

அத்தனை வசதிகளும்..

ஆடல் பாடலோடு

ஆயிரம் ஆயிரமாய் 

வீண் செலவிட்டு

செய்து வைக்கினம் கல்யாணம்…

அமைச்சுக் கொடுக்கினமாம் வாழ்வு

வெள்ளைக்காரனும் காரியும்

கூட மருமக்களாம்.

என் பிள்ளை

வாழ்ந்து தானே ஆகனும்

அவனுக்கு அவளுக்கு

வெக்கை தாங்காது

ஊருக்கு போனால்

பூச்சிக்குப் பயம்

வெயிலுக்கு வெளுத்திடுவம்

ச்சா..

கறுத்திடுவம் என்று

வகை வகையாய் திரவியங்கள்

வாங்கி தடவினம்.

வெள்ளைக்கு நிகராய்

வாழனும் நாங்களும்..

வாஸ்தவம் பேசும் கூட்டம்.

வந்தாள்.. அந்த மகள்

கார்த்திகை திங்கள் 27ம் நாள்

எவர் பெத்த மகளோ

எது உயிர்த்த பெண்ணே

ஆனாலும் உரித்துப் போட்டாள்

ஆயிரமாயிரமாய்

ஓநாய்கள் தோல்…!

மேக் கப் மாமி

பவுடர் மாமி

கூவுவோர் கையில்

கறுப்பு வெள்ளி

மலிவு விலை கூடையில் மேக் கப் 

குவியல் குவியலாய்..!

துவாரகா வா…

துருவி ஆராயினமாம்

இல்லையடா 

அவள்

இறுதிப் போர் வரை

கொண்ட இனத்துக்காய்

கொண்டை கூட 

கட்ட காலமின்றி

களம் கண்ட

அஞ்சா புலி மகள்..!

நிழல்

வெளுத்தது

உங்கள் சாயம்..!

போலியா அவள்

போலிகளே..

போட்ட வேடங்கள் களைந்தது

போங்கடா போங்க..!!

Leave a comment »

தலை தெ(த)றி..!

தலை தெறித்ததொன்று

தறிக்க..

தளிர்க்கவொன்று

தயவோடு..!!

Leave a comment »

புதுக்கணக்கு.. காபன் கணக்கு.

Top climate funds have bigger carbon footprint than the index - Citywire

புகை விட்டே

புகைக்க வைத்து

புதுப்புனைவு

புது வெற்றியாம்..

புவி மகள் வெந்து தணிந்து

புனிதப்படுறாளாம்

புனிதர்கள் சீமையில்

புரளி கிளப்ப

புரளுது செய்திகளால்

புதுப் பக்கங்கள்..!

புரியாத புதிராய்

புரண்டோடுது வெள்ளமும் சவாலாய்..!

புதுக் கெடு

புதிய விதிகள்

புவி எனி மிளிருமாம்

புவியினை கரியால் காயப்படுத்தி

புதுவினையாய் கானகத்தை கந்தறுத்து

புல் முதல் புரவி வரை

புலம்ப விட்டு

புதிதாய் இன்று COP-26 சாதனையாம்..!

புல்லாங்குழலால் இசை மீட்டு

புள் கூட்டம் கூட பாடி மகிழ

புனைந்து பருத்தியால் உடை நெய்து

புதுச் சிரட்டையில் தாகம் தீர்த்து

புவியோடு ஒட்டி வாழ்ந்து

புது வருடத்தையே

புகழவனாம் பகலவனுக்கு படையளிட்டு

புளகாங்கிதம் கண்ட

புகழ் இயல் தமிழ் சொல்லெடுது

புதுப்பாடல் பாடி நின்ற 

புவித் தமிழ் தொல்குடி

புள்ளட்டில் பற்றக்கிது – இன்னும்

புகைவிட்ட படியே..!

புதுக்கணக்காய் காபன் கணக்கு

புதிய தடமாய் காபன் தடம்

புடவை முதல் புது ரெஸ்லா வரை

புசிக்கும் உண்டி முதல் விடும் மூச்சு வரை…

புதிய விதிப்புக்கள் தாண்டி

புகையடங்க இன்னும் எவ்வளவு காலமோ

புதைகுழிகள் தான் சொல்லுமோ பதில்..!

What is a carbon footprint updated 2021 - CO2 Living

Leave a comment »

அடுத்த தலைமுறைக்கும் ஒரு தாய் வேண்டும்..!

கோடி வருசமாய்

காத்த அவள் அழகை

கோடிகளில் ஒருத்தியாய்

கோலமிகு கோளமவளை

விண்ணியல் கணக்கில்

நேற்று முளைத்த

இருகால் நடை மூளை பெருத்த கூட்டம்

குத்திக் குடைந்து குதறி

கொட்டி வெட்டி கொழுத்தி

சீரழிச்சு அவள் சீர்குலைத்து – இன்று

சீமான்களாய் சீமாட்டிகளாய்

சீமையில் சபை அமைத்து

சிந்திக்கிறார்களாம்

சீரமைப்போம் மீண்டும் என்று.

அவலம் தந்தவனுக்கு 

அவலத்தை கொடுக்கும் கொடியவள் அல்ல

அவர்களாய் தேடிக் கொண்டதுக்கு

அவளாய் என் செய்வாள்..?!

பெருத்த மூளைக்குள்

பொருமிய அறியாமைக்கு

அவளாய் என் செய்வாள்..?!

சிந்திக்க முடியாத சிறுமைகளை

சீமான்களாய் சீமாட்டிகளாய்

வரிந்து நிற்கும் கூட்டமே கேள்…

தீக்குளிந்து எழுந்தவள் அவள்

தீப்பந்தமாய் வாழ்ந்து கடந்து வந்தவள்

தீங்குகள் பல தீண்டக் கண்டவள்

தானாய் திருத்திக் கொள்வாள்…!

நீங்களாய் திருந்தாவிட்டால்

திருத்தா விட்டால்

திருத்துவாள் உங்களை

போடும் மேடைகள்

வேசமாய் வேண்டாம்

விவேகமாய் வேகமாய் சிந்திக்கட்டும்

இயற்கையை வெல்வோம் கோசம் ஒழித்து

இயற்கையோடு இசைவோம் என்று

வாழ்ந்து வீழ்வதே

உமக்கு அறிவு.. அழகு..!

ஊரைக் குடையும் உலகைக் குலைக்கும்..

நாகரிகப் போலிகள் தகர்த்து

சுற்றுச்சூழலின் இயல்புக்குள்

நமது தேவை முடித்து

நாமாய் வாழ்வோம்

நமது உரிமைகள் பேணி..!

அடுத்த தலைமுறைக்கும்

ஒரு தாய் வேண்டும்

அவளாய் இந்தப் பூமியை விட்டு வையுங்கள்..!!

ஆக்கம் நெ.போ (08-11-2021)

Leave a comment »