Posts tagged தாயகக்கவி

பொன்னியின் செல்வன் – வன்னியின் செல்வன்

கன்னத்தில் முத்தமிட்டு

ஈழ அவலத்தை குறைத்திரையில் இட்டு

‘மணி’ பார்த்த மணியருக்கு

கல்கிக் கடலில்

மூழ்கி முத்தெடுக்க

ஈழத்திட்டின்

வன்னிக் கோடியின் அனுராதபுரம்

கரைதட்டி இருக்கு.

—-

அண்மைக் காலத்தே

புலிக் கொடி ஒன்று

உயிராயுதமாய்

அனுராதபுரம் புகுந்து

நிஜக் கதை படைத்த போது

தூசி மண்டிக்கிடந்த

தமிழகத் திரைக் கண்கள்..

கல்கிக் கிழவனின்

கற்பனையில் வந்த

பொன்னியின் செல்வனால்

வன்னிச் செல்வன் முன்

திறந்து கிடக்குது..!! 

—-

மகிந்தனை வீழ்த்திய

மகிமையை பேசுது

சோழ வாரிசுகள்…

அனுராதபுரமோ

தமிழனை வீழ்த்திய

மகிந்தவின் கதை பேசி

சிங்கள வீரம் காட்டுது.

முரண்பாட்டுக்காய் அல்ல

தமிழினம் முரண்படா ஒற்றுமை ஒன்றுக்காய்

கடந்த காலம் மீளுமா…

ஈழமண்ணில்

தமிழ் ராச்சியம் அமையுமா..? 

ஏக்கமே

பொன்னியின் செல்வனில்

நிறைஞ்சு கிடக்குது..!!

—-

மணிகளும் ராஜாக்களும் திரைகளும்

ஈழக் களத்தின்

உண்மைக் கதை பேசுமா..?

ஈழக்கிழக்கு தான் விடியுமா..?

சோழப் பரம்பரை மீளுமா..

புலிக்கொடி தான் மீண்டும் வானேகுமா..??! 

மீண்டும் ஏக்கமே

தழுவி தொக்கி நிற்குது

பொன்னியின் செல்வனைக் காண்கையில்..!!

Leave a comment »

மீண்ட கவிதை – 79

வாருங்கள் மக்களே கோருங்கள் கைகளே..!
 
தமிழீழமே
தமிழர் தாகம்
தமிழீழமே
தமிழர் தாயகம்
தமிழீழமே
புலிகளின் தாகம்
தமிழீழமே
தலைவன் இலட்சியம்
தமிழீழமே
மாவீரர் மூச்சு
தமிழீழமே
வீழ்ந்த எம் மக்கள் கனவு
தமிழீழமே
எங்கள் தாய் மடி
தமிழீழமே
எங்கள் விளை நிலம்
தமிழீழமே
எங்கள் எதிர்காலம்
தமிழீழமே
எங்கள் வாழ்வு
தமிழீழமே
தமிழர் எங்கள் ஒளி..!
தலைவன் வழியில்
தங்கத் தமிழீழம் விடிந்திட
பொங்குவோம் எழுவோம்
தகர்ப்போம் தடைகள்…!
தாங்குவோம் புலிக்கொடி
வாங்குவோம் சர்வதேச அங்கீகாரம்..!
அதுவரை…
சீறுவோம் பாய்வோம்
வீறு கொண்ட புலிகளாய்
வாருங்கள் மக்களே
கோருங்கள் கைகளே…!

Leave a comment »

மீண்ட கவிதை – 72

சிங்களப் பாசறை திசைகள் எனி இருக்குமோ…?!
 
தமிழ் தாய் சேய்
இந்துவின் மைந்தன்
தலைவன் வாரிசு
மக்கள் இதயம்
அகிம்சையின் நாயகன்
திலீபன் அண்ணா
அன்று முழங்கினான்
மக்கள் புரட்சி வெடிக்கட்டுமென்று..!
இதோ இன்று…
மக்கள்
புரட்சிக்காய்
பொங்கி எழுந்துள்ளார்
தலைவன் வழியில்
தானே நடக்கின்றார்
சிங்களப் பாசறை
திசைகள் எனி இருக்குமோ…??!
செந்தனல் மீது
சுதந்திரப் புலிக்கொடி
பறந்திடும் வேளை..!

Leave a comment »