Posts tagged ஈழம்

பொன்னியின் செல்வன் – வன்னியின் செல்வன்

கன்னத்தில் முத்தமிட்டு

ஈழ அவலத்தை குறைத்திரையில் இட்டு

‘மணி’ பார்த்த மணியருக்கு

கல்கிக் கடலில்

மூழ்கி முத்தெடுக்க

ஈழத்திட்டின்

வன்னிக் கோடியின் அனுராதபுரம்

கரைதட்டி இருக்கு.

—-

அண்மைக் காலத்தே

புலிக் கொடி ஒன்று

உயிராயுதமாய்

அனுராதபுரம் புகுந்து

நிஜக் கதை படைத்த போது

தூசி மண்டிக்கிடந்த

தமிழகத் திரைக் கண்கள்..

கல்கிக் கிழவனின்

கற்பனையில் வந்த

பொன்னியின் செல்வனால்

வன்னிச் செல்வன் முன்

திறந்து கிடக்குது..!! 

—-

மகிந்தனை வீழ்த்திய

மகிமையை பேசுது

சோழ வாரிசுகள்…

அனுராதபுரமோ

தமிழனை வீழ்த்திய

மகிந்தவின் கதை பேசி

சிங்கள வீரம் காட்டுது.

முரண்பாட்டுக்காய் அல்ல

தமிழினம் முரண்படா ஒற்றுமை ஒன்றுக்காய்

கடந்த காலம் மீளுமா…

ஈழமண்ணில்

தமிழ் ராச்சியம் அமையுமா..? 

ஏக்கமே

பொன்னியின் செல்வனில்

நிறைஞ்சு கிடக்குது..!!

—-

மணிகளும் ராஜாக்களும் திரைகளும்

ஈழக் களத்தின்

உண்மைக் கதை பேசுமா..?

ஈழக்கிழக்கு தான் விடியுமா..?

சோழப் பரம்பரை மீளுமா..

புலிக்கொடி தான் மீண்டும் வானேகுமா..??! 

மீண்டும் ஏக்கமே

தழுவி தொக்கி நிற்குது

பொன்னியின் செல்வனைக் காண்கையில்..!!

Leave a comment »

போர்த்திட்டாண்டா தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

பொன்னாடை

பொன்னாடை

போர்த்திட்டாண்டா..
தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

காலம் காலமாய்
வரலாறாய் எழுதி வைத்து..
தமிழினத்தை..
அழித்து துன்புறுத்தியவனுக்கே
சொந்த இனத்தை..
ஊரை விட்டே துரத்தி
அடித்தவனுக்கே..

தமிழன்
பொன்னாடை போர்த்திட்டாண்டா..
பாரடா பார்.. உலக மைந்தா.

தமிழன் போல்
சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல்
அவன் போல்
வீரம் உனக்கும் வருமா கேள்..??!

மானம் கெட்டதுகள்
வாழ்ந்தென்ன
வீழ்ந்தே தொலையட்டும் என்றே
அன்னை சோனியாவின்
எடுபிடிகளாய்
வடக்கிருந்து வந்து..

தமிழன்
பொன்னாடை போர்த்திட்டாண்டா
சிங்களத் தானைத் தளபதிக்கு
பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

வாழ்க தமிழ் வீரம்
எழுக தமிழக புதிய வரலாறு..
காட்டிக் கொடுப்பதில்
காக்கவன்னியனுக்கு எட்டப்பனே
வழிகாட்டி என்று
புதிய பரணி பாடு..
தமிழா பாடு.

தமிழ் மொழி
கனிமொழி
சிங்களவன் பாதம் தடவினாள் என்று
அவள் வீரம் சொல்லி
உன் பரணியில்
புறணி பாடடா தமிழா
பாடு..!

Leave a comment »

செஞ்சோலையில் கருகிய மொட்டுக்கள்..!

dead-rose

மாறாத வடுக்களை

எம்

இதயங்களில் எழுதிவிட்ட

எதிரியே..

இந்தப் பிஞ்சுகள்

செய்த குற்றம் என்ன..??!

ஏன் இந்தத் தண்டனை…??!

உலகம் இயக்கும்

இயந்திரப் பறவைகள் கொண்ட

உன் பலத்தால்..

அதன் திமிரால்

மக்களை…

தண்டிக்க அவசரப்பட்ட

நீ…

இழந்து போன

இந்த  மொட்டுக்களின் வாழ்வை

மீளளிக்க முடியுமா..??!

போர் செய்து

என்ன வென்றாய்..?!

தமிழர் நிலங்களைப்

பறித்தாய்.

மனித மனங்களை சரித்தாய்..

மனிதம் அழித்தாய்..!

ஏன்…

நீ.. மனிதன் அல்ல

சிங்களப்

பேரினப் பிசாசு என்று மொழிந்தாய்.

மனிதனாய்

உன்னோடு வார்த்தைகளால்

பேசிப் பயனில்லை..

இந்த  மொட்டுக்கள்

விரிய முதல் விட்ட

உயிர் மூச்சு

உன்னை அழிக்கும்..!

அப்போதே

அவர்கள்

ஆன்மா சாந்தியடையும்..!
சிங்கள விமானப்படை நடத்திய செஞ்சோலைப்படுகொலைகள் பற்றிய மேலதிக விபரங்கள் இங்கு.

Leave a comment »

தும்பினியின் இடுப்பினில் தெரியுது தமிழீழம்.

சிங்களத்தி தும்பினி

சிங்களத்தி தும்பினி

சும்மா கிடந்த நாம்..
தமிழீழ விடுதலை என்றோம்..
ஆயுதம் எடுத்து
ஆலயத்தில் கொள்ளையடித்தோம்..!
தமிழ் மக்களின் தலையினில்
நன்றே..
மிளகாய் அரைக்க கற்றுக் கொண்டோம்..!
ஆட்காட்டி
வயிறு வளர்த்தோம்..!

போகும் வழி
இடையில் மறந்தோம்..
சிங்களச் சீமையில்
சீமைப் பசுக்களிடையில்
சரணடைந்தோம்..!

தாடி வளர்த்து
கம்னீசியம் காட்டினோம்
வெள்ளை ஜிப்பாவில்
ஜனநாயகம் பேசினோம்
புலி எதிர்ப்பும்
தமிழீழ அழிப்புமே
எங்கள் அரசியலாக்கினோம்.

இன்று…
ஆக்கிரமிப்பு படைகளோடு
தும்பினியின் இடுப்பாட்டத்தில்
சதியோடு குதி போடுறோம்..
தெரியுது தமிழீழம்..
சிங்களச் சீமைப்பசுவின்
சிற்றிடையில் என்று
வாக்குக் கேட்கிறோம்.

மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி
எல்லாம் மாய மான் விளையாட்டு..
பிரபாகரன் எனும்
பெரும் வீரன் இருந்த
பயத்தில்..
உளறித் தள்ளினோம்..!

உறுதியாய் சொல்கிறோம்..
அன்றும் இன்றும் என்றும்
எங்கள் வாழ்விடம்..
சிங்களப் பாசறை..!
அங்கே நாங்கள்
சுதந்திரப் பறவைகள்..!

முழங்குகின்றோம்..
சிங்களத்தி
தும்பினியின்
இடுப்பினில் தெரிவது
தமிழீழம் என்றே..!

வாருங்கள் தமிழ் மக்களே
புலம்பெயர்ந்த பெரு வீரர்களே..
கூடிக் கூத்தடித்து..
உணருங்கள் அவள் இடுப்பை
காணுங்கள் தமிழீழ சுகமதை..!

கூவி அழைக்கின்றோம்..
சிங்களத்தியோடு கூடி
உருவாக்குங்கள்
சிங்க – தமிழ் பரம்பரை ஒன்றை..!
அப்போதே காணலாம்
சிங்களத்தீவினில்
தமிழருக்கு ஓர்
“நிரந்தர” விடுதலை..!

அதுவரை
எப்போதும்..
புலி எதிர்ப்பே
எங்கள் தாகம்..!

நன்றி: http://www.kundumani.blogspot.com/

Comments (3) »