கனவாகி.. கணிதமாகி.. கண்ணீரானது… என்ன..?!

உச்சியில்

வட்டம் ஒன்று வரைந்து

நடிவில்..

வடிவாய் ஓர் கோடிழுந்தேன்.

பின்.. ஆங்கே

கோளங்கள் இரண்டு

சரியாய் பொருத்தினேன்.

கோடும் வளைய

வளையிகள் கொண்டு சரி செய்தேன்.

ஈர்ப்பு மையம் மாறிப் போக

பிறை ஒன்று

உச்சத்தில் வைத்தேன்

சமநிலை குழம்ப

முக்கோணம் ஒன்று

கூடச் சேர்த்தேன்..!

கோடுகள் சேர்ந்து

ஓவியமாக..

உயிரற்று நின்றது.

 

கணிதத்தில்

வகையீடு தொகையீடு

சமன்பாடுகள் பல போட்டு

திரிகோண கணிதமும்

கேத்திர கணிதமும்

எல்லாம் கலந்து

அட்சர கணிதத்தில்

ஒருபடி.. இருபடி

எல்லாம் தாண்டியும்..

பயனில்லை..!

 

அலுப்புத்தட்ட

கட்டிலில் சாய்ந்தேன்

நித்திரை வெளியில்

கோடுகளின் எண்ணத்தில்

உயிர் பெற்றது

ஓவியம்.

 

வார்த்தைகள் தேடினேன்

முந்திக் கொண்டு..

ஓவியம் பேசியது

“உன்னவள் நானடா”

என்றது தான்..

துள்ளினேன் குதித்தேன்

கட்டிலும் முறிய

கழன்றது வீழ்ந்தேன்

கனவும் கலைந்தது..!

 

அயலில் தேடினேன்

அற்புதமாய் நினைத்தது

என் வாழ்வில்

கசங்கிக் கிடந்தது.

கண்ணீரில் குளிப்பாட்டி

என்னைக் கரைய விட்டது

ஓவியம் அல்ல

என்னவள் நினைவு..! :) :icon_idea:

 

3127055-673698-woman-figure-primitive-ar

Comments (2) »

பரிதி அண்ணன் கொலையும் சிறகடிக்கும் கற்பனைக் குதிரைகளும்.

horse

குதிரைக்கு

கொம்பு முளைத்த காலமிருந்து

கற்பனைக் குதிரைகளின்

இனப்பெருக்கத்திற்கும்

குறைவில்லை..!

 

களத்தில் அன்று

ஒரு லங்காபுவத்..!

கடல் கடந்த

தேசங்களில் இன்று

எல்லாமே அதுவாய்…!

 

இல்லாத…

பிரபா அணி

கிட்டு அணி

சண்டை..!

இருந்த…

கிட்டு மீது பொட்டு தாக்கு

பொட்டு மீது மாத்தையா தாக்கு

மாத்தையா மீது யோகி தாக்கு

யோகி மீது கரடி தாக்கு…..

இப்படியே திண்ணைப் பேச்சில்

பொழுது கழித்த கூட்டம்

புலம்பெயர்ந்து மட்டும்

திருந்தவா போகுது..??!

 

இறுதியில்…

சூசை மகன் மீது

பிரபா தாக்கு

பிரபா மீது

சூசை கடுப்பு…

அன்ரன் மீது

பிரபா விசனம்

விசனம் மீது

பிரபா கொலைவெறி…

 

போராட்டம்

நெடுகிலும்

எம்மவரின்

கற்பனைக் குதிரைகளின்

தடாலடி

ஓட்டப் போட்டிகளுக்கும்

குறைச்சலில்லை…!

எதிரியோடு

துரோகிகளும்

மாற்றுக்கருத்து லயங்களும்

திட்டமிட்டு

திறந்துவிட்ட குதிரைகளும்

அவை கக்கிவிட்ட

லத்திகளுக்கும்

வதந்திகளுக்கும்

குறைவேயில்லை..!

 

இன்று அவை

பரிதி அண்ணன் சாவிலும்

பரிதவிப்பு ஏதும் இன்றி..

குதிரைக் குட்டிகளாய் அன்றி

பட்டி தொட்டி எங்கும்

புலனாய்களாய்

பெருகும் நிலை..!

சந்து பொந்தெங்கும்

அவற்றின் ஊளையிடல்..!

உண்மைக்கும் அங்கே

உறங்கு நிலை..!

 

சனமோ…

நிஜம் எது

நிழல் எது

சிந்திக்க முதல்

சங்கதிகள்

மாயையில்

வீழ்த்தப்படுகின்றன…!

எதிரிகளின்

திட்டங்கள்

சுலபமாய்

வெல்ல வைக்கப்படுகின்றன…!

 

சொந்த இனம்

துவண்டு வீழ்ந்தாலும்

சொத்துக் கணக்கு பார்க்கும் கூட்டம்

அடுத்தவன் சொத்தில்

தான் தின்றமை அறியார்..!

தம்

சொந்தத் தோள்களிருந்தும்

அழுக்குப்பட்ட சால்வைகள்

வீழ்வது கூட தாங்கார்..!

Leave a comment »

கட்டறுத்த காளை மாடுகள் – எச்சரிக்கை

261-1018190045-bear_bull+paper+money.jpg

ஈழப் பண்ணையில்
கந்தன் என்ற கமக்காரன்
கட்டி வளர்த்த
காளை மாடுகள்..
பண்பட்டு
மண் பண்படுத்தி
மக்களுக்காய் உழைத்தன
ஓர் காலம்.

இன்றோ..
கட்டறுத்து
சொந்த நிலங்கள் மேயும்
கட்டாக்காலிகளாய்..!

வளர்த்தவரையே
மூர்க்கம் கொண்டு
முட்டி மோதி
சாகடிக்கும்
நிலையும் காணீர்.

விசமிகளும்
கரடிகளும்
விசயத்தோடு
பழி தீர்க்கும் படலம் தொடர்பில்..
எதிரிகளின் கைப்பாவைகளாய்
மூர்க்கம் கூட்ட
கட்டாக்காலிகளிடம்
சாராய வெறியூட்டும்
நிலையும் காணீர்..!

எச்சரிக்கை..!

எப்பொருள்
யார் யார் வாய்
கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள்
காண்பது அறிவு.

Leave a comment »

மண்டியிடாத தமிழ் வீரம்..!!

[யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான சிங்கள இனவெறி படையினர் நடத்திய தாக்குதலின் போது பிடிக்கப்பட்ட படம்]

அகிம்சை கொண்டு
பேசிய எம்மை..
வன்முறை கொண்டு
அடக்கினாய்
ஆயுதம் கொண்டு
பேச வைத்தாய்..!

ஆயுதம் கொண்டு
பேசிய எம்மை
சுற்றம் சூழல் கூட்டி..
சூழ்ச்சியால் வீழ வைத்தாய்..!

வீழ்ந்துவிட்டது
எம் தேசம் என்றே
நீ.. நேற்று வரை கொக்கரித்தாய்..!

வீரத்தமிழர் பரம்பரையில்
வெற்றிகளும் தோல்விகளும்
சாவுகளும் பிறப்புகளும்
புதிதல்ல.. புரிந்து கொள்…!

நீ
எதை நீட்டுகிறாயோ
அதையே…
தமிழ்த்தாய் புதல்வர்
நாமும்
நீட்டுவோம்..!

வீழ்ந்தது
எம் வீரமும்
மானமும் அல்ல..
தேசம் மட்டுமே.
அதை
மீட்போம்..
உன்னை விரட்டியே..!

இப்போதே..
ஓடு
உன் தேசம் தேடி
தூர ஓடு..!
விடு  
எம்மை சுதந்திரமாய்
சொந்த மண்ணில்
வாழ விடு..!

(நன்றி யாழ் இணையம்)

[ Sri Lanka’s Jaffna sees clashes over Tamil rebel remembrance ]

Leave a comment »