விலாசம் இன்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் எம் தமிழ்ப் பெண்கள்..!

Posted Image

பத்தினிகளும்
பதிவிரதைகளும்
புராணங்களில்…
பால பாடங்களில்…
பக்கம் பக்கமாய்
படித்த மண்ணில்
படி தாண்டிய
பத்தினிகளும்
மாதவிகளும்
பெருகி விட்ட நிலை..!

மாங்கல்யம் இன்றி
மண மேடையின்றி
கன்னிகள் வாழ்வு…!
விலாசமின்றிய
விந்துகளின்
சேமிப்பிடங்களாய்
அவர் தம் தேகம் இன்று..!

சராசரி
பாலியல் அறிவு
கூடவா இல்லை…
ஆண்டு ஒன்பதில்
கற்றது கூடவா
நினைவில் இல்லை….
தனி மனித
ஒழுக்கம் என்ன
பல்கலைக்கழகப் பாடமா
வாத்தியார் கற்றுத்தர..?!
முளைக்க முதல்
பொத்திப் பிடிக்கும் கூட்டம்
இன்று
சந்தி தோறும்
முந்தி விரித்துக் கிடக்கிறது..
ஏனிந்த அவலம்..???!

பெண்கள்…
புலிகளாய் வாழ்ந்த மண்ணில்
வீரம் விதைத்து
வீழ்ந்த இடத்தில்
இன்று
அந்நியரின்
அயோக்கியரின்
அனாதை
விந்துகளின்
அநியாயப் பாய்ச்சலில்
சரிகிறார்
மங்கையர்..!
தூக்கிலும்
கிணற்றிலும்
சாவுகள்..!

இது என்ன
இன அழிப்பா
சுய இருப்பழிப்பா..
சிந்தியுங்கள்..!
முதிர் கன்னிகளாய்
இளம் கன்னிகளாய்
பள்ளிச் சிறுமிகளாய்
பேரிளம் பெண்களாய்
எல்லா நிலையிலும்
அவர் வாழ்வு சீரழிவு..!

அன்று
அண்ணன் வழியில்
அடைந்த ஒழுக்கம்
இன்று
அந்நியர் வழியில்
அடைகிறது சாவு..!
இப்படியே போனால்
புவிதனில்..
எங்கே வாழும்
எம் தமிழினம்..???!
முடிவு தான்
என்ன..????!
சத்தமின்றி
யுத்தமின்றி
தமிழினம்
தானே அழியும்..!

=============================

யாழில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

வெள்ளிக்கிழமை, நவம்பர் 23, 2012

Posted Image

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளம் பெண்ணொருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் வீடொன்றிலிருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுழிபுரம் திக்கரை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மஞ்சுளா (32) என்ற திருமணமாகாத இளம்பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்

தான் கரப்பிணியாக உள்ள விடயம் மருத்துவ சோதனையின் போது தெரிய வந்ததனையடுத்தே இவர் தற்கொலை செய்திருக்க கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஈழநாதம்.

Comments (2) »

ஐநா என்ன அரிவரிகள் கூடமா..??!

பாங்கியும்
நம்பியும்
தம்பி
நாராயணனும்
போட்ட திட்டம்
தமிழர் குருதி
பெருக்கி..
சிவந்தது
செங்கடல் அல்ல
நந்திக் கடல்..!

எல்லாம் முடிந்த பின்
மூடி மறைக்க 
ஓர் அறிக்கை
மறைத்ததை மூட
ஓர் அறிக்கை
மூடியதை மறைக்க
இன்னோர் அறிக்கை..
மொத்தம் எத்தனை..??!

இடைக்கிடை
அருண்ட தேசத்துள்..
அமைதிப் புறாவை
கட்டி இழுத்து வர
ஆயிரம் தோறணைகள்.
சிங்களப் பேரினப் பசிக்கு
சீனத்து ரகன்களின்
தீச் சுவாலைக்கு
அசோகச் சக்கரத்தின்
அரக்கத்திற்கு
அத்தனையும் பலி..!

காலத்தே தெரிந்து 
ஓர் தப்பு
காலம் கடந்து
ஓர் அறிக்கை..
காலம் கடத்தி
கற்பது பாடம்..!
கற்றபின்
பதவி உயர்வு தந்து 
நிற்பது கடன்…!
இப்படியே போனால்
உலக அமைதி
என்பது
மானிடர் 
மாண்ட பின் தான்..!

ஐநா 
உலக அமைதிக்கு
ஓர் சபை…
இப்படியும் 
ஓர் இடி முழக்கம்..!
அணுகுண்டின் அழிவில்
அமைதிக்கு
அர்த்தம் கற்ற
கூடமல்லவா..!
முள்ளிவாய்க்கால்
பேரழிவில்
அறிக்கைக் கூடமாவது
விசேடம் இல்லை..!

இன்னும் இன்னும்
மனித அழிவில்
ஆரம்பப் பாடம் கற்க
ஐநா என்ன
அரிவரிகள் கூடமா..?!
மக்கள் வரியில்
அப்படி
ஏன் ஓர் அமைப்பு..?!
பதவிகளால்
பிசாசுகளை
அலங்கரிக்கவா..??!

ஐநா
அமைதிப் புறாக்களாய்
வல்லூறுகளும்
கழுகுகளும்
பாங்கிகளும்
நம்பிகளும்..
இவைகளை நம்பி
தமிழர்
கோழிக்குஞ்சுகளாய்
இரையாவது
நிற்கட்டும்..!

சாண்டிப் புயலுக்குள்
சிக்கிய
நியோர்க்காய் அன்றி
அறிக்கைப் புயலுக்குள்…
எச்சரிக்கை பெறுவோம்
புதினம் படிப்போம்
அறிவை வளர்ப்போம்
அனுபவம் பெறுவோம்
அடையும் இலக்கை
நெருங்க
உப வீதி சமைப்போம்..!
அதுவே
தமிழருக்கு
நற்றுணையாகும்..!
மாண்ட வீரர்
கனவு பலிக்கும்..!

மறக்காமல்.. இந்த இணைப்பையும் பாருங்கள்……….. http://kck.st/SLNEWp

Leave a comment »

எங்களிடம் இசை ஞானம் இல்லை தேச தாகமே உண்டு..!

எங்களுக்கும்
ஆயிரம் ஆசைகள் உண்டு..
அதில்
கட்டுநாயக்கா போய்
கடல் கடந்து
அந்நியப்பட்டு
அந்நிய தேசத்தில்
கடவுச்சீட்டொன்றில்
வதிவிடம் வாங்கி
களித்துப் பின்
கலியாணம் கட்டி
இசைஞானியின்
காதல் இசையில்
கருத்தால் மயங்கி
கலவி செய்து
கலந்திப்பதும் ஒன்று…!

ஆனாலும்
கால்கள் நகர மறுத்தன.
காலம்
தடுத்து நிறுத்தின.
அன்னை தேசம்
அடிமை விலங்கு தாங்கி
அழுது புலம்பும் நிலை
அனுதினமும் அமைதி குலைத்தது…!

கழுத்தில்
நஞ்சு கட்டி
களமதில்
கருவி ஏவி
சாவு பல கண்டோம்
ஏன்…..
கார்த்திகை 27 இல்
எமக்கு
ஓர் நாள்
கழிப்பு கழிப்பீர் என்றோ..???!

கல்லறைகள்
வரிசையாய்
அடிக்கி நிற்கும்
கோலம்..
எம் கால்களின்
அணிவகுப்பினைச் சொல்லும்..
அது கூட – இன்று
எதிரி காலடியில்..!
தேசப் புதல்வர்தம்
வித்துடல்களின்
குருதியாற்றின்
ஈரப் பெருக்கம்
கார்த்திகைப் பூவின்
செந்நிறமாகி..!

இந்த வேளையும்
இசைக்க ஒரு
கானம் இருக்குது..
மோகமோ
முகாரியோ அல்ல
தேச பக்தியே அது..!

அண்ணல் காந்தியின்
வீரத்துக்கு
தேச பக்தி கொண்டெழும் உறவுகள்
என் தேச பக்திக்கு
பதில் சொல்ல..
மணிக்கணக்கு தேடுகிறார்
Money தான் முதன்மை என்கிறார்..
பிழைக்கத் தெரியாதவன்
நான் என்கிறார்..!!!
இல்லை இல்லை..
நாங்களோ
இசை ஞானமில்லா
சூனியங்கள் என்கிறார்
ஆணவத்தின்
வடிவம் என்கிறார்.
இன்னும் என்னென்னவோ
எல்லாம் சொல்கிறார்.

ஆம்…
உங்கள் வார்த்தைகள்
உண்மை தான்..
எம்மோடு இருப்பதோ
எம் தேகம் கூட இல்லை
தேச தாகம் மட்டுமே…!!!

தேசம் ஒன்று இன்றேல்
இந்த ஞானத்தின் சரிவு
காலத்தால்
உடலழிவில் நிகழும்..!
நில அழிவோ
பறிப்போ
இன அழிவில்
முடியும்..!
இசைக்க ஆளுமற்ற
கேட்க யாருமற்ற
வெற்றிடம்
ஓர் நாள் மிஞ்சும்..!

சிந்தியுங்கள்..
ஞானிகளே
அவர்தம் சீடர்களே..!
கேளுங்கள்
தோழர்களே…
கார்த்திகை
எமக்கு
உயிர்..!
அதன் நனிகுளிர்
காற்றில் கலந்திருப்பது
வெறும் நீர்த்துளி அல்ல
எம்
உயிர்த்துளி..!
காற்றாய் வீசுவது
உப்புத் துகள்கள் அல்ல
எம் கல்லறை
மூச்சுக்கள்..!

காலம்
ஓர் நாள்
உண்மை
உணர்த்தும்..
இசைஞானம் அன்று
சேதி கேட்டு
உயிர் நீத்திருக்கும்..!

இது சாபம் அல்ல
சரிதம்..!

Leave a comment »

சுட்டிப் பையன்.. நான் வயசுக்கு வந்திட்டேன்..!

மூஞ்சியில்
புள்வெளி துளிர்க்கும்
காலிடை
காடு பற்றி வளரும்..
காட்டிடை
ஒற்றைத் தென்னை மரம்
ஓங்கி வளரும்
தேகம்
“ஓடிக்குளோன்” பூசாமலே
வாசம் வீசும்..!

கானகத்துக் குயிலிசை
காண்டாமிருகக் கத்தலாகும்
பறட்டைத் தலை
வாரி இழுக்கும்
இல்ல.. கொம்பு வைக்கும்
கசங்கிய சட்டை
“அயன்” பண்ணும்
அரைக்காற்சட்டை
பாதம் வரை
நீண்டு நீளும்..!

பக்கத்து வீட்டு
பருவப் பாப்பா
நடு நிசியில்
கனவில் வரும்..
ஆடைகள் ஈரமாகும்
இன்பப் பாய்ச்சல்
இடைக்கிடை நிகழும்..
இப்படித்தான்
அம்மா கருப்பை
தாண்டி வந்து
பன்னிரு ஆண்டில்
ஆனது..!

கூடவே…
பள்ளியில்
தூசணம்
பொழுது போக்காகும்
கை நடுவிரல்
சுட்டுவிரல் பெருவிரல்
அடிக்கடி
கூட்டம் போடும்…
கடைசி விரல்
நக அளவு
விட்டம் பார்க்கும்..
விஞ்ஞான பாடத்தில்
உயிரியல் பிடிக்கும்
அதிலும்
இனப்பெருக்கம்
ரெம்பப் பிடிக்கும்…!

இளையராஜா
ஏ ஆர் ரகுமான்
கிணுகிணுத்த
தென்னை மரம் சுற்றும்
பாடல்கள்
இன்னிசையாகும்
நாவலும்
கதைகளும்
கண்கள் தேடிப் படிக்கும்
கவிதைகள்
விரல்கள் தானே
கிறுக்கும்..
அழகு
இருக்கோ இல்லையோ
மனம்
அடிக்கடி
கண்ணாடியில்
லயித்துக் கொள்ளும்..!

ஆபத்து..
தெரிந்தும்
கைகள் விட்டு
சைக்கிள் பறக்கும்
கார்கள் உறுமும்
பாடல் உரக்கக் கத்தும்..
காது செவிடானாலும்
அவள் காதில் விழனும்
மனம் கட்டளை போடும்..!

பாவை அவள்
யாராய் இருப்பினும்..
வாசம்
தேடி நுகரும்
பரிசம்
மின்சாரம் பிறப்பிக்கும்
மூளை
கிறுகிறுக்கும்
உடல்
காற்றில் பறக்கும்
மனம்
தனிமை விரும்பும்..!

பொதுவெளியில்
மங்கையர் முன்
தலைகள் கவிழும்..
கிணற்றடியில்
கண்கள் மேயும்..
யன்னல் இடைவெளிகள்
திரைகளாகும்
அட்டைப் படங்கள்
கசங்கலாகும்…!

இவைதாம்
அறிகுறிகள்
ஆணது
பூப்பெய்தலுக்கு..!
அது
ஏழிலும் வரலாம்
எழுபதிலும் நிகழலாம்..!

Comments (1) »