விலாசம் இன்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் எம் தமிழ்ப் பெண்கள்..!

Posted Image

பத்தினிகளும்
பதிவிரதைகளும்
புராணங்களில்…
பால பாடங்களில்…
பக்கம் பக்கமாய்
படித்த மண்ணில்
படி தாண்டிய
பத்தினிகளும்
மாதவிகளும்
பெருகி விட்ட நிலை..!

மாங்கல்யம் இன்றி
மண மேடையின்றி
கன்னிகள் வாழ்வு…!
விலாசமின்றிய
விந்துகளின்
சேமிப்பிடங்களாய்
அவர் தம் தேகம் இன்று..!

சராசரி
பாலியல் அறிவு
கூடவா இல்லை…
ஆண்டு ஒன்பதில்
கற்றது கூடவா
நினைவில் இல்லை….
தனி மனித
ஒழுக்கம் என்ன
பல்கலைக்கழகப் பாடமா
வாத்தியார் கற்றுத்தர..?!
முளைக்க முதல்
பொத்திப் பிடிக்கும் கூட்டம்
இன்று
சந்தி தோறும்
முந்தி விரித்துக் கிடக்கிறது..
ஏனிந்த அவலம்..???!

பெண்கள்…
புலிகளாய் வாழ்ந்த மண்ணில்
வீரம் விதைத்து
வீழ்ந்த இடத்தில்
இன்று
அந்நியரின்
அயோக்கியரின்
அனாதை
விந்துகளின்
அநியாயப் பாய்ச்சலில்
சரிகிறார்
மங்கையர்..!
தூக்கிலும்
கிணற்றிலும்
சாவுகள்..!

இது என்ன
இன அழிப்பா
சுய இருப்பழிப்பா..
சிந்தியுங்கள்..!
முதிர் கன்னிகளாய்
இளம் கன்னிகளாய்
பள்ளிச் சிறுமிகளாய்
பேரிளம் பெண்களாய்
எல்லா நிலையிலும்
அவர் வாழ்வு சீரழிவு..!

அன்று
அண்ணன் வழியில்
அடைந்த ஒழுக்கம்
இன்று
அந்நியர் வழியில்
அடைகிறது சாவு..!
இப்படியே போனால்
புவிதனில்..
எங்கே வாழும்
எம் தமிழினம்..???!
முடிவு தான்
என்ன..????!
சத்தமின்றி
யுத்தமின்றி
தமிழினம்
தானே அழியும்..!

=============================

யாழில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

வெள்ளிக்கிழமை, நவம்பர் 23, 2012

Posted Image

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இளம் பெண்ணொருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் வீடொன்றிலிருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுழிபுரம் திக்கரை பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் மஞ்சுளா (32) என்ற திருமணமாகாத இளம்பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்

தான் கரப்பிணியாக உள்ள விடயம் மருத்துவ சோதனையின் போது தெரிய வந்ததனையடுத்தே இவர் தற்கொலை செய்திருக்க கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: ஈழநாதம்.

2 பதில்கள் so far »

  1. 1

    Philander said,

    உங்களை போன்ற ஆட்களே இந்த நிலைக்கு காரணம். வெளிநாட்டில் இருந்து போராட்டத்தை தூண்டி விட்டு அந்த மக்களின் வாழ்க்கையை வீணாக்கிய உங்களை போன்ற மக்களே.

  2. 2

    kuruvikal said,

    ஓர் இனம் தனது அரசியல் சமூக விடுதலைக்காகப் போராடினால் அது கெட்டுக் குட்டிச்சுவராகனும் என்று எங்கும் சட்டம் எழுதி வைக்கப்படவில்லை. போராட்ட காலத்தில் வீண் போகாத சமூக ஒழுக்கம் இன்று எதிரிகளால் துரோகிகளால் சீரழிக்கப்படுவதற்கும் வெளிநாடுகளில் உள்ள மக்களுக்கும் என்ன தொடர்பு..??! நீங்கள் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு எதிரிகள் போலவே எதற்கும் போராட்டத்தை குறை சொல்லி நியாயமான தமிழ் மக்களின் போராட்ட உணர்வை மக்கள் மத்தியில் மழுங்கட்டிக்க நினைப்பதாகவே உங்கள் பதில் தொனிக்கிறது. இது அல்ல சமூகப் பிறழ்வுகளுக்குத் தீர்வு..!


Comment RSS · TrackBack URI

பின்னூட்டமொன்றை இடுக