என் கண்களெனும் வலையில் சிக்கிய கயல்..!

tw2.jpg

 

நான் கண்டது என்ன

கனவா கனவா..

கன்னி அவள் கண்கள்

எனைத் தீண்டியது என்ன

நனவா நனவா..!

 

பாதைகள் ஆயிரம் இருக்க

பக்கம் வந்து முட்டிப் போனது என்ன

முட்டுமுட்டு பாடலின்

விளைவா விளைவா..!

பார்வைகள் பரிமாறி

மெளன மொழி பேசியது என்ன

நாட்டியமா நாடகமா..!

 

கருங் கூந்தல் பரப்பிய

அவள் முதுகு என்ன

சந்தனம் பரப்பிய அம்மிக்

கல்லா கல்லா

என் கண்கள் என்ன

அதில் உருளும் அம்மிக்

குழவியா குழவியா..!

 

காற்றிலாடும் சுடிதார் என்ன

சாமிக்கு வீசும் சாமரமா

இந்த ஆசாமி

அந்தப் புயலில் சிக்கிச் சிதைந்தது என்ன

விதியா சதியா..!!

 

முடிவாய் என்ன

கண்களுக்குள் சிக்கி

மூளையில் பதிவானது

அவள் நினைவா நினைவா

அதன் தவிப்பில்

இவன் கமராவை

நோண்டுவது என்ன தலை

விதியா விதியா..!

 

இதன் பெயர்தான்  என்ன

காதலா காதலா

அல்லது என்ன

ஈர்ப்பா ஈர்ப்பா..!

பட்டிமன்றம் நடத்த

இது என்ன

தலைப்பா தலைப்பா..!

விட்டிட்டுப் போடா

அடுத்த பிகர்

இதை விட அழகு என்று

மனம் அலை பாய்வது என்ன

இயற்கை தந்த

வரமா வரமா..!

 

பிரம்போட அம்மா

கிட்ட வராத வரை

இது தான் என்ன

என் விளையாட்டா விளையாட்டா..!

காலம் பதில் சொல்லும்

“பிளே பாய்” உனக்கு

ஆப்பு வருமடி ஓர் நாள்

காத்திரு காத்திரு…

மனச்சாட்சி மனசுக்குள்

மல்லுக் கட்டுவது தான் என்ன

இயற்கையா இயற்கையா..! :) :lol:

 

(படம்.. எங்கள் கமரா: கண்ணைக் கவர்ந்து கருத்துள் நுழைந்து கமராவில் சிக்கி கவிதையான பிகர். எங்கிருந்தாலும் வாழ்க..!)

Leave a comment »

இது.. காதல் தூதுவன்..கதை முடியும் நேரம்..!

Bee.jpg

 

அழகு மலர்களின்

மெளன மொழியில்

காதல் கொண்டு..

விரியும் இதழ்களின்

காந்தக் கவர்ச்சியில்

கவர்ந்து..கள்ளுண்டு

கலவி கண்டு

கருத்தரிக்க உதவுகிறான்

காதல்

தூதுவன் இவன்..!

அந்த விசயத்தில்

இவன் ஒரு

“பிளே பாய்”..!

 

மானுட உலகம்

மாற்றி அமைத்திட்ட

இயற்கையின் நியதியில்

கருத்தடை மாத்திரைகள்

கருப்பைகளுக்கு

விடுமுறை தர

யோனிகளுக்கோ

ஓய்வில்லாத உரசல்கள்..!

உராய்வு நீக்கிகளுக்குக் கூட

அங்கு பஞ்சம்..

கிழியும் அந்த

உறைகளின் வியாபாரமோ

இன்று

உச்சியில்..!

நிமிட நேர

உள்ளக் களிப்பில்

போதை கண்டு..

உடலில் சேரும்

அந்த

மாத்திரை

நஞ்சுகளின்

தாக்க அறிதல் இன்றி

கூடிக் களித்திருக்குது

மானுட சமூகம்..!

 

பாவம் இவன்

அதே..

மானுட உலகின்

அரக்கச் சிந்தனையில்

பூச்சி கொல்லி

நஞ்சுகளின்

நாசச் செயலில்

மூளை குழம்பி

இறக்கிறான்..!!

வசந்தம்

கொண்டு வரும்

மணம் நுகர

மனசின்றி..

மலர்களின்

அழகுணரும் உணர்ச்சி இன்றி..

வளர்ச்சி குன்றி

பலவாறு

மடிகிறான்..!

கவிஞர்களின்

கண்ணுள் நுழைந்து

கருத்தில் வந்தவன்..

விளை நிலங்களின்

விளைச்சலில்

பங்கு தந்தவன்..

இன்று

பிறக்க முதலே..

பாடையேறுகிறான்..!

 

“கருக்கொள்ள முதலே

கருவை அழிக்கலாம்”

கருத்தியலோடு

கட்டியணைக்கும்

மானுட தர்மம்..

விசிறும் அந்த

நஞ்சுகள்

அழிக்குது

காதல் தூதனை

அவன் எய்யும்

மன்மத அம்புகளை..!

விளைவு

நாளை தெரியும்

அதுவரை

மானுட தர்மம்

வெறியாடி நிற்கும்..!

 

காலம் கடந்தாவது

உண்மை உணர்த்துமா

சங்கதி..??!

நஞ்சுகள்

நாசம் செய்யும்

இயற்கையின் வனப்பை

மானிடர்

மீட்பரா..??!

விழித்திடுங்கள்

மானுடரே

இந்த நிலை

இனியும் தொடர்ந்தால்..

நாளை உமக்கும்

இதே முடிவுதான்.

தூரம்..

அதிகமில்லை..!

 

 

Leave a comment »

ஆனந்தாவோடு ஆட்டம் போடும் யாழ் இந்து அன்னை..!

jhc.jpg

யாழ் நகர் இந்துக்கல்லூரி

பல கலை பயில் கழகமும் அதுவே

தமிழர் தலை நிமிர் கழகமும் இதுவே

கீதம் இசைத்த கல்லூரி…!

 

நல்லூரின் வீதியிலே

இராசையா திலீபனை

பட்டினிப் போரிலே கிடத்திய கல்லூரி..!

 

பொன்னம்மான் தொடங்கி…

பல நூறு வேங்கைகள்

தமிழீழக் களத்தில் அணிவகுக்க

அழகு பார்த்த கல்லூரி..!

 

ஒப்பரேசன் லிபரேசனிலே

ராதா என்ற சாதனையாளனை

சரித்திரமாக்கிய கல்லூரி..!!

 

இன்று..

கிரிக்கெட் தொடர் என்று

ஆனந்தாவோடு

போடுவதென்ன.. சதிராட்டமா..???!

 

ஆனந்தாவின்

சிங்கள மைந்தர்கள்

கோத்தபாய முதல்

பொன்சேகா கண்டு

பசில் ராஜபக்ச வரை..

பேரினச் சிங்களச் சேனையின்

மூத்த இனவெறியர்கள்..!

அன்னையே தெரியுமா

அந்தச் சேதி உந்தனுக்கு..!

 

தமிழினக் கொலையின்

போர்க்குற்றவாளிகள்

வேறு யாருமல்ல

றோயலும் ஆனந்தாவும்

உந்தித் தள்ளிய

சிங்கள இனவெறியர்கள்..!

அன்னையே புரியுமா

அது உனக்கு..!

 

இன்று நீயோ..

சிங்களச் சேனையின் அடிவருடி..

பொட்டு வைச்சு

மாலைபோட்டு

குனிஞ்சு கும்பிட்டு..

பந்தாடுறாய்..!

அது பந்தல்ல

தமிழர் வாழ்வுரிமை

விளங்குமா உனக்கது..!

இரண்டு இனிங்ஸில் முடிய

அது விளையாட்டல்ல

நூற்றாண்டுகள் பல கண்ட

வரலாறு ஆத்தா..!

 

தமிழர் தலைநிமிர

கீதம் இசைத்து நின்றவளே

வழிகாட்டி வந்தவளே..

இன்று தலை குனிய

வைத்தாயே..!

 

முள்ளிவாய்க்காலில் ஊற்றெடுத்த

தமிழர் இரத்த ஆறு

உந்தன் பாதம் நனைத்தும்

மதியிழந்தனையே..!!

சிங்கத்தின்  கொடுவாளுக்கு

இரையாகி

வீழ்ந்த தமிழ்குடிகளின்

கணக்கு எண்ணி முடியமுன்னே

கொடியேற்றிக் கொண்டாட்டமா..??!

உனக்கேனிந்த அவசரம்

புத்தி பேதலித்ததுமேன் தாயே..!!!

 

உள்ளூரில் ஊட்டிய

போதையா

வெளிநாட்டில்

இருந்து வந்த

கட்டளையா..??!

 

ஆனந்தாவோடு

ஆனந்த நடனமாடும்

யாழ் இந்து அன்னையே…

சொந்த மகவுகளை

நாகர்கோவிலிலும்

செஞ்சோலையிலும்

நவாலியிலும்

ஆனந்தாவின்

கொலைவெறிக்கு..

பறிகொடுத்த பாவிகள் சார்பில்

உந்தன் மைந்தன் இவன்

பந்தடிக்கும் ஈனச்செயல் கண்டு..

ஏங்கித் துடிக்கிறான்..!

ஈனர்கள் சிலர்

உந்தன் பாதத்தின் புனிதம்

சிதைப்பதை

எனியும் நீ

அனுமதிப்பாயா..???!

 

இனியும் நீ

தறிகெட்டு ஆடினால்..

வேண்டாம்

உந்தன் தொப்புள்கொடி உறவு..!

உடனடியாய்

தொடர்பறுப்பேன்

மானத் தமிழிச்சி

மைந்தன் இவன்..

எனி எந்நாளும்

உச்சரிக்கேன்

“இவன் உன் மைந்தன்” என்றே..!!

 

இது எந்தன் முடிவமல்ல

யாழ் இந்து அன்னையே…

மானத்தமிழன்

ஒவ்வொருவன் முடிவும் ஆகும்..!

 

jhc1.jpg

படங்கள்: jhc.lk

Leave a comment »

“சமரு”க்கு மட்டும் சாலை வரும் சாமிகளே..!

Murugan-temple-procession-2012.jpg

சண்டை களத்தில்

சமருக்குப் பயந்து

சாவுகளைச் சாட்டி

சமுத்திரங்கள் தாண்டி

சந்துபொந்தெங்கும்

சரணடைந்திட்ட

சாமிகளே…

“சமரு”க்கு மட்டும்

சாலை வரும்

சங்கதி கண்டு

சந்தி சிரிக்குது..!

 

சனங்களின் பயபக்தியில்

சன்னதமாடும் சாமியார்கள்

சட்டுப்புட்டென்று

சதுரம் வளர்க்க

சந்தர்ப்பம் வழங்கியது போதும்..!

சரித்திரம் படைக்க

சண்டைக்குப் போன தேசம்

சரிந்து கிடக்குது

சார்ந்திருக்குது

சந்ததி ஒன்று..தப்பிப் பிழைக்க..!

 

சாவில் தான்

சந்தர்ப்பம் கண்டும்

கரங்கொடுக்க மறந்தீர்..!

சரிந்தது போதும் அவ்வினம்..

சரணடைந்தொரு அடிமை வாழ்வில்

சண்டித்தனம் இயற்றியதும் போதும்..!

சட்டுபுட்டென்று காரியம் ஆகட்டும்

சில்லறைகள் நிறையும் உண்டியல்கள்

ஊருக்குப் போகட்டும்

சாலை வரும் சாமிகளே..

சனத்திடம் வேண்டி நில்லுங்கள்

சனாதன தர்மமல்ல…

சண்டைக் களத்தில் காயம் கண்ட

சனங்களுக்கு ஓர் தர்மம்..!

 

ஆளுக்கொரு பவுனோ.. டொலரோ

தர்மமாய் தாருங்கள்

கொண்டை மாலையில்

சிதையும் அந்த

டொலர்களை பிச்சையாய் தாருங்கள்..

ஆண்ட இனம்

நாடு நாடா

தழைத்தோங்க

தம் வாழ்வையே தந்திட்ட

உத்தமர்கள்..

சந்ததி ஒன்று

உய்வுற..!!!

Comments (2) »