ஈச்சை மரத்து வேர்களே.. கப்பல் ஏற முதல்.. எங்கள் கதை கேளுங்கள்..!!

kathankudi8.jpg

{சோழன் ஆண்ட தமிழன் வாழ்ந்த பூமியில் கப்பலேறி குடியேற வரும் அரபுத் திமிர்கள்.. பேரீச்சை மரங்கள். ஈழத்தின் கிழக்கின் காத்தான்குடி என்ற ஊர் இன்று முழு முஸ்லீம் கிராமமாகி அரபு வடிவம் எடுக்கிறது}

 

அரபிய

மணற்படுக்கையின்

அற்புதங்களே

ஈச்சை மரத்து வேர்களே..

கூலிகளாய்

நாம் அங்கு

சிந்திய வியர்வை

சிதறிய நீரில்

வளர்ந்து பெருத்த திமிர்களே..!

 

எட்ட வளர்ந்து

கனி தரும் போது

ஒட்டகமாய்

தாங்கி நின்று

பறித்துப் பெட்டியில் அடைத்து

ஏற்றி விட்டு

நாம் கூனி விட்டோம்..!

எஜமானர்களின்

எண்ணெய் காசில்

நீரோ

நிமிர்ந்து நின்று

மினுமினுக்கிறீர்..!

 

விமானம் ஏறி

ஆசை கொண்டு

அரபுலோகம் வர

தங்கை மீது

பழிமுடித்து

அவள் தலை கொய்தீர்..!

நீரோ..

வேரூன்ற

கப்பலேறி

தமிழீழம் வருகிறீர்

காத்தான்குடியில்

குந்திவிட..!

குடியிருந்துவிட..!!

 

சுவட்டு எண்ணெய்கள்

நேற்றைய மரணத்தின்

பெறுதிகள்.

உங்கள் பணத்திமிரின்

மதத்திமிரின்

தேட்டங்கள்..!

 

ஈழ மண்ணில்

என்ன இருக்கு..

விதவைகளான

எம் சகோதரிகள் தான் இருக்கு..!

மிச்சம் என்ன….

உம் சோதரர்கள்

கொன்று புதைத்த

சோதரத் தமிழன்

இரத்த ஈரம் தானுண்டு..!

 

இன்னும்

என்ன

உறிஞ்ச வருகிறீர்

சொந்த நிலம் இழந்து

அநாதைகளாய் நாம் இங்கு..!

மூச்சுத் தான் மிச்சம்

அதைவும்

அல்லாவுக்கு

அடகு கேட்காதீர்..!

 

விட்டு விடுங்கள்

எம்மை..

நிம்மதியாய் வாழ்கிறோம்.

நெடும் பனை நடுவே

நொங்குண்டு..

வாகை நிழலில்

செண்பகத்தின்

சிறகடிப்பில்

உந்தி எழும்

சுதந்திர

தேசக்காற்றிழுத்து.!

 

{ஈழம்: காத்தான்குடி… இன்று.}

பின்னூட்டமொன்றை இடுக