Archive for ஜூன், 2009

மீண்ட கவிதைகள் – 114

kagayaphoenix8jp

உனக்காயே நான்…!


சுதந்திர வான் நோக்கி
தனிப் பறவையாய் நான்
இணைச்சிறகடித்து பறந்திட
மலரே உன்னை
மலர்ச் சிறகாக்கி
என்றோ என்
நினைவுச் சிலையில்
செதுக்கி வைத்தேன்…!

தோப்பிருந்து புறப்பட்டு
இலக்கு நோக்கிப் பறக்கும் வேளை
மலரே உன் நினைவு மட்டும்
மனதோடு இல்லைக் கண்டால்
அடிக்கும் என் சிறகும்
ஓய்தல் காண்கிறேன்
அதற்காய் நான் உன்னடிமையில்லை…!
உன் அன்புக்கு அடிமையாகி
உன்னினைவின் சக்தியில் பறப்பதாய்
மட்டுமே உணர்கிறேன் பார்…!
அதுவும் ஓர் நிலை உந்துசக்தியாக….!

நாளை என் சிறகுகள்
பலமிழந்தால்….
உடல் வீழ்வது உறுதி
என் இலட்சியம்
என்னோடு கனவாகிச் சிதறவும் கூடும்
அவ்வேளை உன் அன்பு மட்டும்
எனைத் தாங்கும் கோலம் கண்டால்
மீண்டும் எழுவேன்…!
வேற்றுமையில்லா உன்னன்பு
போதுமடி என் சிறகுகள் இயங்க….!

தேவதையாய் அல்ல
சக தோழியாய் என்னருகிரு
தாயவள் பக்கத்துணை போல்
நீ வருவாய் எனும் நினைவிரு
உனக்காய் நானும் வாழ்வதாய்
சத்தியம் கூட வேண்டாம்…
உன் வார்த்தையில்
உன்னளவில் சத்தியம் வை
அது போதும்
நீயும் என் உறவாய்
என்னோடு சிறகடிக்க….!

மாயக் கோலம் போட்டு
புலக்கண்ணும் மனக்கண்ணும்
ஏமாற்ற நினைக்காதே….
பருவக் கோலம் காட்டி
புத்தி கிறங்கடிக்க எண்ணாதே…
பறவையாயினும் பதறாமல்
பண்பட்ட உள்ளம்
பசப்புகள் அறிந்தால்
உதிர்க்கும் உன் நினைவுச் சிறகும்
என்னைப் பலமாக்கும்
அறிந்து கொள் தோழியே….!

இப்போதே….
உண்மைக்கு உதாரணமாய்
என்னோடு வா….
அகிலத்தின் அன்பின்
போரொளி காட்டுறேன்
அதுவரை உற்சாகமாய்
என் சிறகுகள் அடித்தபடி
உனக்காயே நான்…!

Leave a comment »

நான் ஒரு இன(நிற)வெறியன்.

dictionary-plants-flowers

உலகுக்கே சக்தியூட்ட

ஒளி வீசும் சூரியனின்

கதிர்களில் பேதமில்லை..

நிறங்கள் மாறினும்

முட்டையிட்ட  பேட்டுக்கு

குஞ்சுகளில் பேதமில்லை..

உதயச் சூரியனை

கூவி அழைக்கையில்

சேவல்களுக்குள் பேதமில்லை…

இளங் காலைப் பனி குளிரில்

மொட்டவிழ்த்து இதழ் விரிக்க

பூக்களுக்குள் பேதமில்லை..

புத்தகச் சுமை மறந்து

பள்ளி செல்லும்

அந்த சின்னச் சிட்டுக்களின்

சிரிப்பொலியில் பேதமில்லை..

ஆனால்…

ஆபீஸ் செல்ல தலைசீவிய

எனக்கோ

ஒரு முடியில் நரை கண்டதும்..

வந்ததே பேதம்

புடுங்கி எறியும் வெறியோடு…

நானே   நிறவெறியன்.

Leave a comment »