Archive for தமிழகம்

சந்தனமேனிகள் செம்மரக்கட்டைகளாதென்ன..!!

செந்தமிழ் தாயின்

சந்தன மேனியர்

ஆந்திர எல்லையில்

சரிந்தே வீழ்ந்தனர்

மரக்கட்டைகள் நடுவே

செம்மரக்கட்டைகளாய்..!

 

கிரந்த மொழி பேசும்

திராவிட வாரிசுகளாம்

தெலுங்கர்கள்

பட்சாதாபமின்றி

வேட்டையாடி மகிழ்ந்தனர்

செந்தமிழன் பிணம் வீழ்த்தி…!

 

சிங்களப் பேய்கள்..

ஹிந்தியப் பிசாசுகள்

குடித்த ஈழத்தமிழ் இரத்தம்

காய முதல்..

கடலில் கரைந்த

தமிழகத் தமிழனின் குருதி

நிறம் மாற முன்..

நடந்தது சம்பவம்..!

 

சந்தனக் கடத்தலை

சாட்டி

முதலைகள்

வேட்டையாடி முடித்தன..

மீண்டும்

ஓர் இனப்படுகொலையின்

நினைவை

மனதின் ஓரத்தில் இருத்தி..!

 

புலிக்கொடி நடுவே

படை நடத்திய

சோழ தேசம்

இன்று

வீழ்ந்து மடிகிறது..!

காரணம் தான் என்ன..

தமிழனை தமிழன்

ஆள வழியின்றி போனதே..!

 

மீட்போம்

எம் ஆளும் உரிமை..

காப்போம்

தமிழர் வாழ்வுரிமை

இவ் வையகத்தில்..!

 

மாற்று வழி தான்

இதற்கும் இல்லை

புரிந்தே நின்று

புரிய வைப்போம்

சொந்த தேசமிழந்து..

வையகம் எங்கும்

சிதறி வாழும்

தமிழ் உள்ளங்களில்..!!

Leave a comment »

அண்டையில் இருக்கும் அசிங்கமே அநியாயமே..!

முள்ளிவாய்க்கால்1

அண்டையில் இருக்கும்

அசிங்கமே

அநியாயமே

87 இல் ஈழத்தில்

தமிழனைக் காப்பதாய்

படைகள் கொண்டு வந்தாய்

சிங்களத் துவக்கால் அடியும் வாங்கினாய்

இருந்தும் அவன்

வால்பிடித்து கரம் குலுக்கி

அடித்தவனைக் காத்தாய்..

நண்பனெனும் வரமும் கொடுத்தாய்..!

 

வரவேற்று..

பூமாலை போட்ட தமிழனை

“பூமாலை” என்ற பெயரில்

படைகள் ஏவிக் 

கொன்றாய் குவித்தாய்..!

சொந்த இனத்தைச் சூறையாட

கூலிகளை வளர்த்தாய்

இறுதில்

சுருட்டியதோடு

கூட்டிக் கொண்டு ஓடினாய்..!

 

நீண்ட தொல்லை இது

துரத்தாமல் தீராது என்றே..

வீரப் புலிகள் விரட்டி அடிக்க

ஓடிய நீ…

மீண்டும்…

கொல்லைப்புறந்தில்

இருந்து கொண்டு

முள்ளிவாய்க்காலில்

சிங்களத் துணையோடு

வேட்டைகள் ஆடினாய்..!

 

தமிழர் சாவினில்

அரசியல் செய்தாய்

காந்தியம் பேசினாய்

ஜனநாயகம் பசப்பினாய்

சீனனுக்கு அஞ்சிய நீ

தமிழரிடம் வீரம் காட்டினாய்

பிராந்திய

வல்லாதிக்கம் வளர்த்தாய்..!!

 

நீதிகள் மறைத்தாய்

செய்திகள் தவிர்த்தாய்

உண்மைகள் கொன்றாய்

தமிழக

தொப்புள் கொடி உறவுகள்

வாய்கள் அடைத்தாய்

கண்கள் கட்டினாய்

கால்கள் மறித்தாய்

சிறையில் அடைத்தாய்..!

 

சினிமாச் சித்திரங்களை

சிகரத்தில் இருத்தியற்காய்

அவர்களும் அங்கலாய்த்தனர்

தீர்வுகள்  தேடி  ஓடினர்

கெஞ்சினர் கூத்தாடினர்

சொந்த மண்ணில் அடிமைகளாய்..!

 

ஈழத்தமிழன் தான்

சோரம் போய்

இருப்பை இழந்தான் என்றால்

அரைகுறையாய் ஆள வழி இருந்தும்

ஆட்சியை இழந்து

தமிழகத் தமிழன் அவதியானான்..!

 

இன்றும் அதை

ஹிந்திய ஒருமைப்பாடு என்ற

அசிங்கத்தால்

வேலி தகர்த்து

மானுட உணர்வுகள் கொய்து

சோழன் செழித்த தஞ்சையில்

முள்ளிவாய்க்கால்

முற்றத்தில் காட்டி நின்றாய்..!

 

மீண்டும்

கொன்றாய்.. சிதைத்தாய்..

சுயநலப் பேய்களை ஏவி

தமிழர்களை

சிலையாயும் வாழவிடன் என்கிறாய்..!!

அண்டையில் இருக்கும்

அசிங்கமே

அநியாயமே..

உனக்கு மனச்சாட்சியே இல்லையா..??!

 

வலிந்தவன் எல்லாம்

வா வா என்று வட முனையில்

போருக்கு அழைக்க

பயந்து ஓடி

தென்முனையில்

அடைக்கலம் தேடும் கோழையே

தமிழனிடம் மட்டும் தானா

உன் உளவும்

வீரமும்..!

 

ஹிந்திய தேசமே

தெரிந்து கொள்..

சோழப் பெரும்படை

மீண்டும் கிளம்பும்

தெற்கும் வலிமை பெறும்

அங்கும் நீ

கிலியெடுத்து ஓடும் நாள் வரும்..!

அதுவரை எனி

பொறுமையின் உச்சம் எய்திட்ட

தமிழினம் தூங்காது..!

Leave a comment »

அடம்பிடிக்கும் ஆகாசவாணி..!

Akashvani-FM-925602907-7113022-1.jpg

ஆகாசவாணி…

டெல்லியின் குரலாய்

தமிழ் ஈழ மண்ணில்

ஒளிவு மறைவு வாழ்வில்

சந்துபொந்தில்

நடந்த அந்த

ஓரிரு நிகழ்வுகள் கூட

ஒளிப்பு மறைப்பின்றிச்

சொன்னது ஓர் காலம்..!

 

காலை மதியம் மாலை என்று

முறுக்கிவிட்ட

வானொலிகள்

மத்திய மாநிலச் செய்திகள் காவி வர

களத்தில் நின்ற வீரனும்

நிகழ்வின் விளைவறிவது

அங்கு தான்..!

 

அமைதிப் படை என்று

அரக்கர் படை ஒன்று வந்து சேர

ஆகாசவாணியும்

அண்டப்புளுகிற்கு

அடிபணிந்து கொண்டது.

லங்காபுவத்தோடு

காதலொடு கூடலும் கண்டு கொண்டது..!

 

அன்று தொற்றிய வியாதி

இன்றும் ஆறவில்லை.

இத்தனை ஆயிரம்..

தமிழர் சாவுகள் கண்டும்

இரங்கவில்லை…

அண்டப்புளுகொடுதான்

அதன்

அந்தியக்காலம் என்று

அடம்பிடிக்குது..!

 

இந்தியாவின்

இந்துக்கள் கட்சியாம்

ஈழ மண்ணில்..

தமிழ் பேசும்

இந்துக்கள் அழிவை

சிங்களம் செய்தால்

மன்னிக்குமாம்.. மறக்குமாம்..!

ஹிந்தி பேசும்

இஸ்லாம் செய்தால்

கொலைக் கருவி ஏந்துமாம்…!

சரத்பவாராம்

அன்னை இந்திராவோடு

ஒட்டிய போது

ஈழத்தமிழருக்காய்

ஓர் விரதம்

அன்னை சோனியாவோடு

ஒட்டிய பிறகு

விரதமும் தாபமாச்சு..!

 

ஆகாசவாணிகளே

ஆகாயம் விட்டு வர வேண்டாம்

இடையில்

இனிப்பாய் அமைந்திட்ட

சிங்கள உறவுகள்

அறுக்க வேண்டாம்.

அண்டை அயலில்

நடந்த இன அழிப்புக்கு

ஓர் ஒப்பாரி…

மனிதாபிமானம்

இருந்தால்

காட்டுங்கள்..!

 

கலைஞரும்

கழன்றுவிட்ட பிறகு

கட்சிகள் சாட்டி

கழுத்தறுப்பது

தொடர வேண்டுமா..??!

ஆகாசவாணிக்கு

ஈழத்தமிழன் 

தந்த ஆதரவுக்கு

நன்றிக்கடன் வேண்டாமோ..??!

 

கொடுஞ் சிங்களத்திற்கு

கொடுத்தது போக..

நன்றி

மிச்ச சொச்சம்

எஞ்சி இருந்தால்……

பாரதத்தில் கீதை சொன்னபடி..

ஐநாவில் அதை

அழிந்து போன

தமிழருக்கு.. காட்டி நிற்க..!!!

Comments (1) »

முள்ளிவாய்க்கால் முடிவல்ல…தொடக்கம்..சாத்தியமானது இன்று.

429580_448087988602629_699388762_n.jpg

முள்ளிவாய்க்கால் தனில்

அழித்திட்டோம்

புலிக் குகை

கலைத்திட்டம்

தமிழ்க்குடி..

எக்காளமிட்டது

துட்டகைமுனு வம்சம்..!

கலைத்திட்டது

தமிழ் குடியல்ல

தேன்கூடு..

தமிழ் உலகெங்கும் – அது

கட்டுது வதைவதையாய்

பெரும் கூடு..!

தேடி வந்து

அழித்த பகை

திகைத்து நிற்கும்

தருணங்கள் பல

காத்திருக்குது..!

 

வெற்றி முழக்கமிட்ட

சிங்களம்

விழி பிதுங்க

முழங்குது

விடுதலைக் கோசம்

தமிழ் மாணவர் பாசறையெங்கும்..!

செம்மொழியாம்

தமிழ் மொழியில்

தாய் நிலமாம்

தமிழகத்தில்

மையம் கொண்டு….!

 

வீழ்த்திவிட்டோம்

சோழப் பெருங்கொடியாம்

புலிக்கொடி..!

மமதையில் நின்ற

மகிந்த கூட்டம் முன்னிலையில்

பறக்குது 

மீண்டும் புலிக்கொடி

சர்வதேசம் எங்கும்..!

 

உச்சரிக்கக் கூட

முடியாது..

பிரிவினையின்றி

ஒட்டிவிட்டோம்

உடைந்த தேசத்தை

ஆயுத ஆக்கிரமிப்பு

கொண்டு அடக்கிவிட்டோம்

தமிழர் உணர்வுகளை

குதூகலித்த சிங்களம்

குறுகி நிற்குது

தமிழீழ முழக்கம்

ஐநா வரை எட்டுவதால்..!

 

ஆயுதத்தால் பேசி

அடக்குமுறையால் அழித்து

பேரின வெறியை திணித்து

ஹிட்லரென்ன

மகிந்தரென்ன

யுத்த வெறியில்

காண்பது வெற்றியல்ல

சொந்தத் தலைக்கே

வேட்டு..

சொன்னது பழைய வரலாறு

இருந்தும்

கேள் புத்தியற்றோர்

திரும்பப் படித்திட

எழுதுது

தமிழினம் – இன்று

புதிய சரித்திரம்

ஒற்றுமையின் புறப்பாடு கொண்டு..!

 

நேற்று வரை

தம்பியின் படையிருக்கு

விடிவு வரும்..

நம்பியிருந்த தமிழினம்

முள்ளிவாய்கால் தனில்

சிங்களப் பேரினம்

யுத்த வெறி கொண்டு

தமிழின இரத்தம் சுவைத்து

எழுதிட்ட முடிவுரைக்கு

எழுதுது – இன்று

புதிய

தொடக்கவுரை..!

 

“முள்ளிவாய்க்கால் முடிவல்ல

தொடக்கம்”

சிங்களத்தின்

வைகாசி வதை கண்டு

கவிஞன் ஒருவன்

செப்பிவிட்ட

செம்மொழி

சாத்தியமானது

சத்தியமானது இன்று..!

577947_595378593807503_407160963_n.jpg

விடுதலைக்கு

விதையாக்கி

புதைத்துவிட்டோம்

பல்லாயிரம் உயிர்களை..!!

கற்புக்காய் ஊரையே எரித்திட்ட

கண்ணகி வரிசையில் அன்றி

இனத்திற்காய்

தன்னையே எரித்திட்ட

தீரரின் நினைவொடு..

தீயுக்கும் ஆங்கே

உடல் தனைக் கருக்கி

உயிர் தருதல் விட்டு

உறவுகளே

ஒற்றுமையால்

உரைத்து நிற்போம்

உலகம் ஏற்க..

தமிழரின் தாகம்

தமிழீழத் தாயகம் என்றே..!

 

45563_501120533268764_1706233359_n.jpg

படங்கள்: முகநூல்

Leave a comment »

அதிகார வர்க்கங்கள் பேசும் மொழி ஒன்று தான்.

295580_10151318437272944_842806401_n.jpg

ஆண்ட இனம்

அடிமைப்பட்டுக் கிடக்க

அது அரசிழந்து

ஆட்சி இழந்தது

மட்டுமா குற்றம்..?!

அது சக்தி இழந்து

கிடப்பதும் குற்றமே..!

 

எழுச்சி கொள்

மாணவ இனமே

குமுறும் இந்தக்

குரல்களுக்கு..

சக்தி கொடு

ஈழ தேசமதில்

ஒரு விடுதலைப் பூப் பூத்திட…!

 

அதிகார வர்க்கத்தின்

பேசும் மொழி

அடக்குமுறை..

காக்கிச் சட்டைகள்

அதன் ஏவு இயந்திரம்..

அவை எதிர்த்து நில்

அமைதி வழியில்..!!

வரும் துயர் தாங்கி நில்

சக்தி காட்டி நில்…

மாணவர் ஒற்றுமையில்..!

 

பொங்குவோம்

நாம் தமிழராய்

தரணியெங்கும்

நீதி செப்பி

மானுடம் போற்றும்

தமிழினம் காக்கும்

தமிழீழ தேசம்

மீட்டிட…!

 

போஸ்டர்  மீளமைப்பு :- நெடுக்ஸ். இணைப்பு நன்றி:- முகநூல்.

Leave a comment »

எனியும் மெளனம் தேவையா..?!

indian-military-in-action.jpg?w=300&h=27

 இந்தியப் படைகளின் பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சி. இதே போன்ற காட்சிகள்  ஈழத்தில் வன்னியில்.. சிங்களப் படைகளினால். அவர்களின் வழிகாட்டிகள் யார் என்பதற்கு இந்தப் படம் சாட்சி…

[ http://southasiaspea…ial-powers-act/ ]

வானலையில்

குயிலாய் ஒலித்தவள்

இதய நோயாளி..

வன்னி ஆக்கிரமிப்பில்

பல்லாயிரம் தோழிகளோடு

பிணமாய்..!

தமிழ் பெண்களை

புணர்ந்திழுத்தே கொன்ற

சிங்கள இன வெறிநாய்களின்

தமிழ் ஒட்டுக்குழு

ஓநாய்களின்

கொடூரத்தின்  முன்னே..

மக்களின்

கண்ணீர் காய்வதற்கிடையில்..

 

நாலே வயது

நடக்கக் கூட தெரியாத பிஞ்சு – அதை

காம வெறியில்

பிரிச்சு மேஞ்சு

மோச்சரியில் போடுகிற

ஆக்கிரமிப்பு உலகம்

ஈழத்தில்…!

 

பள்ளிப் பிள்ளை

பாடம் கற்கப் போகும் வேளை..

காவல்துறையின் கவனிப்போடு

கட்டறுத்து அலையும்

குடிகாரக் கூட்டத்தின்

போதையின்

கரங்களில் சிக்கிச்

சீரழிவு…

இப்படி ஓர் உலகம்

தமிழகத்தில்..!

 

புது… டெல்லியில்

பஸ்ஸில் போகும்

பயணத்தில் கூட

கொடுத்த பணத்திற்கு

பாதுகாப்பு இல்லை..!

சட்டத்தின் அமுலாக்கமும்

அங்கு இல்லை..!

சண்டியர்களின்

சளைக்காத உணர்விற்கு

அவள்  உடல்.. பொருள்.. ஆவி

பரிசளிப்பு..!

 

எல்லாம் முடிய

உயர் பீடங்களில்

மக்களின் வாக்குகளில்

குந்தியுள்ள

மந்திகளோ

வெண்ணிறை ஆடை போர்த்திய

மிருகங்களாக..

எக்காள ஒலி எழுப்பி

ஆரவாரிக்கின்றன.

இவை தொடர்வதா

நிற்பதா..???!

விவாத  மேடைகள்

அரங்கேறுகின்றன..!

 

ஆனால்..

அடுத்த கணமோ

இன்னோர் பெண்

பிணமாகத் தயாராகிறாள்..!

 

நீதி தேவதை

நிலைதடுமாறிவிட்ட

தேசங்களில்…

மீண்டும்

செப்புத் துண்டுகள்

துப்பும் கருவிகள்

நிமிர்ந்தால் அன்றி..

இந்த மனித மிருகங்கள்

கொண்ட எண்ணங்கள்

மடிவது  நடவாது..!

மண்ணில்

மானுடமும்

வாழாது..!

Leave a comment »