Archive for உலக வாழ்வியல்

சந்தனமேனிகள் செம்மரக்கட்டைகளாதென்ன..!!

செந்தமிழ் தாயின்

சந்தன மேனியர்

ஆந்திர எல்லையில்

சரிந்தே வீழ்ந்தனர்

மரக்கட்டைகள் நடுவே

செம்மரக்கட்டைகளாய்..!

 

கிரந்த மொழி பேசும்

திராவிட வாரிசுகளாம்

தெலுங்கர்கள்

பட்சாதாபமின்றி

வேட்டையாடி மகிழ்ந்தனர்

செந்தமிழன் பிணம் வீழ்த்தி…!

 

சிங்களப் பேய்கள்..

ஹிந்தியப் பிசாசுகள்

குடித்த ஈழத்தமிழ் இரத்தம்

காய முதல்..

கடலில் கரைந்த

தமிழகத் தமிழனின் குருதி

நிறம் மாற முன்..

நடந்தது சம்பவம்..!

 

சந்தனக் கடத்தலை

சாட்டி

முதலைகள்

வேட்டையாடி முடித்தன..

மீண்டும்

ஓர் இனப்படுகொலையின்

நினைவை

மனதின் ஓரத்தில் இருத்தி..!

 

புலிக்கொடி நடுவே

படை நடத்திய

சோழ தேசம்

இன்று

வீழ்ந்து மடிகிறது..!

காரணம் தான் என்ன..

தமிழனை தமிழன்

ஆள வழியின்றி போனதே..!

 

மீட்போம்

எம் ஆளும் உரிமை..

காப்போம்

தமிழர் வாழ்வுரிமை

இவ் வையகத்தில்..!

 

மாற்று வழி தான்

இதற்கும் இல்லை

புரிந்தே நின்று

புரிய வைப்போம்

சொந்த தேசமிழந்து..

வையகம் எங்கும்

சிதறி வாழும்

தமிழ் உள்ளங்களில்..!!

Advertisements

Leave a comment »

ஏய் மனிதா நில்லு… சொல்லு..!!!!

போர்1

ஏய் மனிதா நில்லு

உலகம் படைச்சது எதற்காக

நீ…

உலோகம் கொண்டு எல்லையிடவா..??!

 

ஏய் மனிதா சொல்லு

இவள் பிறந்தது எதற்காக

நீ..

கம்பி வேலியிட்டு அடைத்து வைக்கவா..??!

 

ஏய் மனிதா சொல்லு

ஒற்றை மலலாவுக்கு குண்டடி என்றதும்

பதறுவது எதற்காக..

நீ

இவளை முட்கம்பியால் கட்டி வைக்கவா…??!

 

ஏய் மனிதா சொல்லு

உன் குழந்தைக்கு ஐபாட்டும்.. ரெடிபெயரும் எதற்காக

நீ

இவள் போல்

எண்ணற்ற குஞ்சுகளை வதைப்பதை மறைக்கவா..??!

 

ஏய் மனிதா சொல்லு

யுனிசெப் என்ற ஒன்று எதற்காக..

நீ

உள்வீட்டுப் பிரச்சனைகளில் உளவு பார்க்கவா..??!

 

ஏய் மனிதா சொல்லு

மனித உரிமைகள் யாருக்காக..

நீ

வெள்ளைத்தோலால் உலகை ஆள்வதற்கா..??!

 

ஏய் மனிதா சொல்லு..

இந்த வேசங்கள் எதற்காக

நீ

அழிவைத் தேடிச் செல்வதாலா..??!

 

ஏய் மனிதா சொல்லு…

இந்தப் பிஞ்சின் கண்ணில் கண்ணீர் எதற்காக

நீ…

அவள் வலியில் வாழ்வதற்காகவா..!

 

ஏய் மனிதா நில்லு..

உன்னிடம் ஆயுதம் எதற்காக..??!

உன் உரிமைக்காக.

அதுவே மற்றவரிடமும்.. அவர் உரிமை காக்க.

நீ..

அதையே பயங்கரவாதமும் ஆக்காதே.

 

ஏய் மனிதா நில்லு..

அடுத்தவனை திட்டுவது எதற்காக..??!

நீ

முதலில் உன் செயல் எண்ணிப்பார்…!!!!

 

ஏய் மனிதா நில்லு

இனியும் வேண்டாம் இந்த வேற்றுமைகள்

நீ

ஒன்றில் திருந்து அல்லது திருத்தப்படுவாய்…

கடவுளால் அல்ல இவள் போல் சக மனிதனால்..!!!!

Leave a comment »

இல்லானை.. இல்லாளும் வேண்டாள்..!

கொடுமை

 

காதல் கடவுள் போல

அன்பு கடல் போல

நெஞ்சில்..

கருணை அள்ள அள்ள

இருந்தும் என்ன பயன்..

கடனட்டையில் டொலரும்

களுசான் பையில் பவுன்ஸும்

பாண்டு பொக்கட்டில் ரூபாயும்

மாடிமனையொடு

நல்ல காரும் இல்லையேல்…

இல்லானை

இல்லாளும் வேண்டாள்

இதுதான்

மானுட உலகம் இன்று..!

 

நோயென்று

பசியென்று

புசித்தலுக்கு உணவின்றி

ஒரு பாதி உலகில்…

மானுடர் பதை பதைக்கையில்

மறுபாதி உலகில்..

பகட்டுக்கு செய்யும் செலவில்

பாதி என்ன.. பருப்பளவு போதும்

உண்டி சுருங்கிய வயிறுகள்

கொஞ்சம் நிரம்ப…!

இருந்தும் இல்லை என்று

சொல்லும் உலகில்..

இல்லானை

இல்லாளும் வேண்டாள்..!

இதுதான்

மானுட உலகம் இன்று.

 

கத்தர் என்றும்

அல்லா என்றும்

சிவன் என்றும்

விஷ்னு என்றும்

சிலைக்கும்

சிலுவைக்கும்

பிறைக்கும்..

செலவழிக்க

கோடி கோடியாய்

கொட்டிக் கொடுப்பார்

இல்லானை கண்டால்

இல்லை என்று துரத்தி அடிப்பார்..!

இல்லானை

இல்லாளும் வேண்டாள்

இதுதான்

மானுட உலகம் இன்று.

 

இந்த நிலை

என்று மாறும்..

பசிக்கு புசிக்க

பால் கொடுக்கும் மாடு மேய்ப்பவன்

இல்லான்..

அள்ள அள்ள கக்கா போகும்

அல்சேஷன் நாய் மேய்ப்பவன்

உள்ளான்..

இந்த மூடநிலை

என்று மாறும்..

அன்று

இல்லாமை

உதைந்து தள்ள

இல்லாளும்

கட்டிப் புரள்வாள்

கட்டிலில்..!

அதுவரை…

இதுதான்

மானுட உலகம் இங்கு.!!

Comments (1) »

நத்தார் நாயகனே….

jesus1
 

நத்தார் நாயகனே
பரிசுத்த இளைஞனே..
குழந்தை ஜேசுவாய்
அன்னை மேரியின்
தவப்புதல்வனாய்…
இறை தூது கொண்டு.. நீ வந்தாய்
தூசிகள் படித்த
மனித மனங்களை தூய்மைப்படுத்த..!

அகிலத்தில் – முதலாய்
அகிம்சை எனும்
ஆயுதம் தூக்கிய இளைஞனே
அப்பாவியாய் நீ
உலகை வலம் வந்தாய்.
மனித மனங்களை
மாண்பால் பண்படுத்த
நீ முயன்றாய்..!
ஆனால்…
அடப்பாவிகள் உன்
தலையில் முட்கிரீடம் இட்டு
தோளில் சிலுவை வைத்தார்
இறுதியில்
அதில் உனை அறைந்தே
வீரம் கொண்டார்..!

அதர்மத்தின் வீரம்
அகோரம்
தர்மத்தின் வீரம்
சாந்தம்..!

இளைஞர் எம்
முன்னோடியே
விடுதலைப் போராளியே..
நாமும் வருவோம்
உனது தடம்படித்தே..!
தோழனே ஜேசுவே
உன் பிறந்த நாளில்
உனை அன்போடே நினைவுகூறுகிறோம்..!
வொட்காவுக்கோ.. வைனுக்கோ அல்ல
கேக்குக்கோ புடிங்குக்கோ அல்ல
சாண்டாவுக்கோ சாந்தாவுக்கோ அல்ல
உன் தியாகத்தை
மனதில் இருத்திட
உன் தடம் பற்றி நின்றிட..!

Leave a comment »

உயிரை நெருப்பாகி உடலை வெடியாக்கி உதாரணமானோரே..!

bt

 

உயிரை நெருப்பாகி

உடலை வெடியாக்கி

உதாரணமானோரே..!

உயிரென மதித்த

மண்ணின்

உடனடித் தடைகள் நீங்க

உருகி வீழ்ந்த

கண்மணிகளே…

 

பதவியும் வேண்டாம்

பட்டமும் வேண்டாம்

தாரமும் வேண்டாம்

தராதரமும் வேண்டாம்

விடுதலை ஒன்றே

வேண்டும்..

கட்டளை கேட்டு

துள்ளிக் குதித்து

தேச எல்லையில்

ஆக்கிரமிப்பாளனை

ஆக்கிரமித்த வீரரே…

 

தலைவனைக்

காத்திடுங்கள்

தாய் தேசத்தை

மீட்டிடுங்கள்

நாங்கள்..

சாவிலும்

வானிருந்து நோக்குவோம்

நட்சத்திர ஒளிகளாய்

சுதந்திர தமிழீழத்தை

ஒளிர்விப்போம்

ஆசை வளர்த்துச் சென்ற

ஆருயிர்களே..

 

இன்று நாம் கண்பது

உங்கள் கனவினின்றும்

உருமாறிய

உண்மைகளையே..!

 

உங்கள்  உயிர் மூச்சிழுத்த

தோழர்கள் சிலர்

உருமாறித் தடம்மாறி

உலாவர…

உங்கள் காற்தடம்

பற்றியோர் சிலர்

காட்டிக் கொடுப்பில்

கருமமாய்

காரியமாற்ற..

உங்களைப் போற்றியே

தாம் தப்பித்த

மக்களோ

உண்மைகள் மறந்து

ஆடி மகிழ்கின்றார்

அடிமை வாழ்வில்

அவர் சுதந்திரம்

மிளிர்கிறதாம்..?!

 

இருந்தும்

தர்மம் வெல்லும்..

வேளை வரும்

நெருப்பாகி

உடலை புகையாக்கி

தேசக்காற்றில்

கலந்திட்ட தீரரே..

நீங்களே

எம்  நீரை

நிலத்தை வானை..

ஆக்கிரமித்திட்ட

எதிரி மூச்சிலும்

கலந்து நிற்கிறீர்..!

 

வாழ்வு வரும்

உங்கள் கனவும்

நனவாகும்

காலம்  வரும்..!

தர்மம்  காக்கும்

உங்கள்

வீழாத நினைவது

தமிழரின் தாகம்

தமிழீழத் தாயகம்

என்றே

சத்தியம் செய்யும்..!

 

Leave a comment »

அதிகார வர்க்கங்கள் பேசும் மொழி ஒன்று தான்.

295580_10151318437272944_842806401_n.jpg

ஆண்ட இனம்

அடிமைப்பட்டுக் கிடக்க

அது அரசிழந்து

ஆட்சி இழந்தது

மட்டுமா குற்றம்..?!

அது சக்தி இழந்து

கிடப்பதும் குற்றமே..!

 

எழுச்சி கொள்

மாணவ இனமே

குமுறும் இந்தக்

குரல்களுக்கு..

சக்தி கொடு

ஈழ தேசமதில்

ஒரு விடுதலைப் பூப் பூத்திட…!

 

அதிகார வர்க்கத்தின்

பேசும் மொழி

அடக்குமுறை..

காக்கிச் சட்டைகள்

அதன் ஏவு இயந்திரம்..

அவை எதிர்த்து நில்

அமைதி வழியில்..!!

வரும் துயர் தாங்கி நில்

சக்தி காட்டி நில்…

மாணவர் ஒற்றுமையில்..!

 

பொங்குவோம்

நாம் தமிழராய்

தரணியெங்கும்

நீதி செப்பி

மானுடம் போற்றும்

தமிழினம் காக்கும்

தமிழீழ தேசம்

மீட்டிட…!

 

போஸ்டர்  மீளமைப்பு :- நெடுக்ஸ். இணைப்பு நன்றி:- முகநூல்.

Leave a comment »

வெண்புறாவுக்கே சக்தி கொடுத்த நவீன சிபி.

Illam0623_04.JPG

அதிகாலை வேளை

அந்தக் கோடை நடுவிலும்

நனி குளிர் நடுக்கம்..!

வந்த அழைப்பை…

போர்வைக்குள் ஒளிந்திருக்கும்

ஆசை முந்திக் கொள்ள

அழைப்பு மிஸ்ஸானது.

 

மீண்டும்

சிணுங்கும் அந்தத் தொலைபேசி

சினந்து எழுப்ப…

“என்ன ரெடியோ

வெண்புறா நிகழ்வு இருக்கு

போகலாம்”

மறுமுனைக் குரல் அழுத்த..

முடிவு…

“காட்டாயம்

அவைக்காகப் போகனும்..”

மனது உறுதியானது.

 

தமிழன்

பரம்பரை பரம்பரையாய்

நாற்று நட்ட

வயல்கள் நடுவே

சிங்களம் விதைத்த

கண்ணிவெடிகள்

கால் பிடுங்கி அழித்தது

எம் மக்கள் வாழ்வு..!!

அது கண்டு

நெஞ்சுருகித்

துணிவு கொண்டு

புறப்பட்ட புறாக்களே

இந்த வெண்புறாக்கள்..!

 

சம்பிரதாயத்திற்கு

ஒலிவ் கிளை ஒன்றை

நுனிச் சொண்டில்

உயரக் காவி

வித்தை காட்டி..

வேட்டையாளர்

வேடம் கலைக்கவல்ல

இந்தப் புறாக்கள்.

மக்கள்

வேட்டைக்கு வந்தவன்

விட்டு வைத்த

கண்ணிகள் அகற்றி

மானுடத் துயர் நீக்க

ஈழத்து

நவீன சிபியின்

சக்தி கண்டு

பறந்து வந்தன

இந்த வெண்புறாக்கள்..!

 

அதிகாலை

காலையாகி

விடியும் வேளை…

மைதானம் வந்து

நோட்டமிட்டன கண்கள்.

பார்வைக்கு எட்டிய தூரம்..

யாருமில்லை

மூர்த்தி ஐயா மட்டும்

“கேட்” திறந்து விட்டார்.

அந்தக் குளிரிலும்

அயராத உழைப்பு..!

 

நேரம் செல்லச் செல்ல

மக்கள் கூட்டம்

விளையாட்டொடு

விளையாட்டாய்

கண்ணிவெடிகளின் ஆபத்து…

உருமறைப்பிடையே

கால் பதிக்க

வெடிக்கும் அந்த

பலூன்கள்..

உவமித்து நின்றன

நிஜக் காட்சிகளை.

போர்களம் தாண்டிப்

பிறந்த குஞ்சுகளும்

கண்ணிவெடியின்

தாக்கம் உணர்ந்தது

மூர்த்தி ஐயா

மூளை கொண்டு.!

 

வேளையதில்

துணிந்து ஆற்றும்

கருமமே

சக்தி கொள்ளும்…

வள்ளுவன் வாக்கில்

“எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”

என்றாகிட

மூர்த்தி ஐயா வாழ்வோ

வள்ளுவன்

வாக்காகி நின்றது..!

 

வாழ்வில் அவர்

கண்டது நாமறியோம்

காட்டியது நாம் உணர்வோம்

அது அவர்

நாமம் என்றும் உச்சரிக்கும்…!

போய் வாரும் ஐயா

விடுதலை வேண்டும்

இந்த இனம்

உம்மையும்

நினைவுப் பூக்கள் தூவி

என்றும்..

இதயத்துள் வைத்துக்

கைதொழும்..!

 

படம்: தமிழ்நெட்.

Leave a comment »