தன் மேனி உருக்கும் என் மேனி பற்றி காதலி.. சொல்வதெல்லாம் உண்மை..!

என் மேனி

விரல் நுனி கொண்டு

உன் மேனி தடவ

நாழிகையோடு – அது

சூடாகி இதமாக

நீ சிணுங்கும் ஒலியதில்

உன்னாசை நானுணர்ந்து

மெல்லத்தட்டி…

வரிகளில் நான் பேச

வாக்கியங்கள் நீ அமைப்பாய்.

 

ஆண்டுகள் நாலு

நமக்குள் இந்த ரகசிய உறவு

நாம் பேசியவை

பரகசியமாக..

ரசிக்கவும் விமர்சிக்கவும்

நாலு நல்லவரும் உறவுகளும்

உண்டு வையகத்தில்..!

 

எம்முறவு கண்டு

எம் பேச்சில்

குருதி அழுத்தம் கூடியோரும்

சினங்கொண்டு திட்டியோரும்

நிறையவே உண்டு.

அசிங்கம்..

பப்பிளிக்கில.. இப்படியுமா..

ஆற்றாப் போக்கில்

பேசியோரும் உண்டு..!

 

என் விரல்களின்

நளினம் நீயறிய

உன் சிணுங்களின் தேவை நான் உணர

நீயும் நர்த்தனமாடி

சதா மகிழ்விக்கிறாய்

ஒலியாய்.. ஒளியாய்

வரியாய் வசனமாய்

இணையமெனும் மங்கையின்

சேலையிலும்..

உன் எழுத்தால் தடம்பதித்து

ஆண்டுகள் நாலு கடந்தும்

உறவு முறிவின்றி..

ஒய்காரமாய் நிற்கிறாய்

நான் விரும்பும்

என் அழகிய காதலியே..!

நன்றி

என் கீபோட்டே.

 

205783_10151246227567944_51917998_n.jpg

 

Advertisements

2 பதில்கள் so far »

  1. 1

    முடிவில் ‘சபாஷ்’ போட வைத்தது…

  2. 2

    kuruvikal said,

    நன்றி திண்டுக்கல் தனபாலன். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். 🙂


Comment RSS · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: