தொகுப்புக்காக சமூகம்

நீங்கள் தானடி எங்கள்.. இதயம் கிள்ளும் தமிழச்சிகள்..!

935335_603925936292327_34281149_n.jpg

நெய் வடியும்

அழகு

வதனங்களா..

பொட்டு நிறை

பிறை

நுதல்களா..

ஓடை நீரோட்டம்

கோலம் 

போடும் பின்னல்களா..

அள்ளி போர்க்கும்

மாராப்பு

குரும்பைகளா…

சங்குக் கழுத்தில்  மின்னும்

பசும்

தங்கங்களா..

வளையல் போட்ட

வளைக்

கரங்களா..

தொடப் பூரிக்கும்

மென்

விரல் பூக்களா…

மெல்லப் புன்னகையில்

மெத்த

பேசும் பதுமைகளா..

ஐந்தடி என்றாலும்

ஐஸ்வரியம்

ஆளைக் கவரும் வர்ணங்களா..

நேர் நோக்கையில்

விழி

தரைநோக்கும் நாணல்களா..

 

உங்கள் வாய்மொழி

தமிழ் மொழி

தேன் சுரக்கும் கொவ்வைகளா..

அந்த

தகுதி

ஒன்றே போதும்…

நீங்கள் தானடி

எங்கள் இதயம்

கிள்ளும் தமிழச்சிகள்..!

 

(படம்: முகநூல்)

மறுமொழிகள் (2) »

கந்தகப் புயலில் சிக்கி குருதியில் குளித்த பூமியே..

215375_601903243161263_1772697797_n.jpg

 

ஆக்கிரமிப்புப் பூதம்

எல்லையின்றி

ஊதித் தள்ளிய

கந்தகப் புயலில் சிக்கி

குருதியில் குளித்து

கறுத்துப் போன பூமியே..

 

ஆடவன் என்றும்

மகளிர் என்றும்

குழந்தை என்றும்

வேற்றுமை உணரா

உருக்குத் துகள்களுக்கு

உடலைப் படையல் செய்த பூமியே..

 

விடுதலைக்காய் எழுந்த

ஓயாத அலைகளின்

தொடக்கப் புள்ளியே

முடிவுப் புள்ளியுமானது கண்டு

இரத்தம் வடித்த தாயே…

 

ஆடை மறைப்புக்குக் கூட

அருகதையற்ற நிலையில்

எதிரிமுன்

அம்மணமாய் நின்ற

தமிழர் தேகம் சுமந்து

வேதனையில் வெந்த தேசப் பூமியே..

 

சிங்களச் சாத்தானின்

இனவெறி

வெற்றி இச்சைக்கு

உன்னையே தந்திட்டு

வெறித்துக் கிடக்கும் தேசமே..

 

தமிழ் தாயிவள்

சேயை

இரும்புக் கவசம் அல்ல

தேகக் கவசம் தந்து

காக்க உறுதுணையாய்

நின்ற தீரமே…

 

பல சேதி அறிகிறேன்

வேதனையில்

விம்மவில்லை

விடியலின் பொழுதில்

நீயொலிக்க

என் கண்கள் 

அவை காண

உழைக்க வேண்டும்

உறுதியே ஊற்றெடுக்கிறது..!!

 

வென்றவர்கள் தோற்க

வெட்கிக் குனிந்த பூமியே

வன்னி மண்ணே

முள்ளிவாய்க்கால் களமே..

நீ நிமிர்வாய் ஓர் நாள்

அது நிச்சயம்..!

 

அது வரை

குனிந்து கிட

கரைபுரண்டோடும்

வெள்ளம் நடுவே

நானிக் கூனி

தப்பிப் பிழைக்கும்

நாணலின்

தந்திரம் கொண்டவளாய்..!

 

புலிகளைப் புதல்வர்களாய்

தந்தவள் நீ..!

தரித்திரம் என்று

காலத்தை நோகாதே.

காலம் மாறும்

உன் கோலமும் மாறும்..!!!

மறுமொழி அளிக்கவும் »

என் கண்களெனும் வலையில் சிக்கிய கயல்..!

tw2.jpg

 

நான் கண்டது என்ன

கனவா கனவா..

கன்னி அவள் கண்கள்

எனைத் தீண்டியது என்ன

நனவா நனவா..!

 

பாதைகள் ஆயிரம் இருக்க

பக்கம் வந்து முட்டிப் போனது என்ன

முட்டுமுட்டு பாடலின்

விளைவா விளைவா..!

பார்வைகள் பரிமாறி

மெளன மொழி பேசியது என்ன

நாட்டியமா நாடகமா..!

 

கருங் கூந்தல் பரப்பிய

அவள் முதுகு என்ன

சந்தனம் பரப்பிய அம்மிக்

கல்லா கல்லா

என் கண்கள் என்ன

அதில் உருளும் அம்மிக்

குழவியா குழவியா..!

 

காற்றிலாடும் சுடிதார் என்ன

சாமிக்கு வீசும் சாமரமா

இந்த ஆசாமி

அந்தப் புயலில் சிக்கிச் சிதைந்தது என்ன

விதியா சதியா..!!

 

முடிவாய் என்ன

கண்களுக்குள் சிக்கி

மூளையில் பதிவானது

அவள் நினைவா நினைவா

அதன் தவிப்பில்

இவன் கமராவை

நோண்டுவது என்ன தலை

விதியா விதியா..!

 

இதன் பெயர்தான்  என்ன

காதலா காதலா

அல்லது என்ன

ஈர்ப்பா ஈர்ப்பா..!

பட்டிமன்றம் நடத்த

இது என்ன

தலைப்பா தலைப்பா..!

விட்டிட்டுப் போடா

அடுத்த பிகர்

இதை விட அழகு என்று

மனம் அலை பாய்வது என்ன

இயற்கை தந்த

வரமா வரமா..!

 

பிரம்போட அம்மா

கிட்ட வராத வரை

இது தான் என்ன

என் விளையாட்டா விளையாட்டா..!

காலம் பதில் சொல்லும்

“பிளே பாய்” உனக்கு

ஆப்பு வருமடி ஓர் நாள்

காத்திரு காத்திரு…

மனச்சாட்சி மனசுக்குள்

மல்லுக் கட்டுவது தான் என்ன

இயற்கையா இயற்கையா..! :) :lol:

 

(படம்.. எங்கள் கமரா: கண்ணைக் கவர்ந்து கருத்துள் நுழைந்து கமராவில் சிக்கி கவிதையான பிகர். எங்கிருந்தாலும் வாழ்க..!)

மறுமொழி அளிக்கவும் »

ஆனந்தாவோடு ஆட்டம் போடும் யாழ் இந்து அன்னை..!

jhc.jpg

யாழ் நகர் இந்துக்கல்லூரி

பல கலை பயில் கழகமும் அதுவே

தமிழர் தலை நிமிர் கழகமும் இதுவே

கீதம் இசைத்த கல்லூரி…!

 

நல்லூரின் வீதியிலே

இராசையா திலீபனை

பட்டினிப் போரிலே கிடத்திய கல்லூரி..!

 

பொன்னம்மான் தொடங்கி…

பல நூறு வேங்கைகள்

தமிழீழக் களத்தில் அணிவகுக்க

அழகு பார்த்த கல்லூரி..!

 

ஒப்பரேசன் லிபரேசனிலே

ராதா என்ற சாதனையாளனை

சரித்திரமாக்கிய கல்லூரி..!!

 

இன்று..

கிரிக்கெட் தொடர் என்று

ஆனந்தாவோடு

போடுவதென்ன.. சதிராட்டமா..???!

 

ஆனந்தாவின்

சிங்கள மைந்தர்கள்

கோத்தபாய முதல்

பொன்சேகா கண்டு

பசில் ராஜபக்ச வரை..

பேரினச் சிங்களச் சேனையின்

மூத்த இனவெறியர்கள்..!

அன்னையே தெரியுமா

அந்தச் சேதி உந்தனுக்கு..!

 

தமிழினக் கொலையின்

போர்க்குற்றவாளிகள்

வேறு யாருமல்ல

றோயலும் ஆனந்தாவும்

உந்தித் தள்ளிய

சிங்கள இனவெறியர்கள்..!

அன்னையே புரியுமா

அது உனக்கு..!

 

இன்று நீயோ..

சிங்களச் சேனையின் அடிவருடி..

பொட்டு வைச்சு

மாலைபோட்டு

குனிஞ்சு கும்பிட்டு..

பந்தாடுறாய்..!

அது பந்தல்ல

தமிழர் வாழ்வுரிமை

விளங்குமா உனக்கது..!

இரண்டு இனிங்ஸில் முடிய

அது விளையாட்டல்ல

நூற்றாண்டுகள் பல கண்ட

வரலாறு ஆத்தா..!

 

தமிழர் தலைநிமிர

கீதம் இசைத்து நின்றவளே

வழிகாட்டி வந்தவளே..

இன்று தலை குனிய

வைத்தாயே..!

 

முள்ளிவாய்க்காலில் ஊற்றெடுத்த

தமிழர் இரத்த ஆறு

உந்தன் பாதம் நனைத்தும்

மதியிழந்தனையே..!!

சிங்கத்தின்  கொடுவாளுக்கு

இரையாகி

வீழ்ந்த தமிழ்குடிகளின்

கணக்கு எண்ணி முடியமுன்னே

கொடியேற்றிக் கொண்டாட்டமா..??!

உனக்கேனிந்த அவசரம்

புத்தி பேதலித்ததுமேன் தாயே..!!!

 

உள்ளூரில் ஊட்டிய

போதையா

வெளிநாட்டில்

இருந்து வந்த

கட்டளையா..??!

 

ஆனந்தாவோடு

ஆனந்த நடனமாடும்

யாழ் இந்து அன்னையே…

சொந்த மகவுகளை

நாகர்கோவிலிலும்

செஞ்சோலையிலும்

நவாலியிலும்

ஆனந்தாவின்

கொலைவெறிக்கு..

பறிகொடுத்த பாவிகள் சார்பில்

உந்தன் மைந்தன் இவன்

பந்தடிக்கும் ஈனச்செயல் கண்டு..

ஏங்கித் துடிக்கிறான்..!

ஈனர்கள் சிலர்

உந்தன் பாதத்தின் புனிதம்

சிதைப்பதை

எனியும் நீ

அனுமதிப்பாயா..???!

 

இனியும் நீ

தறிகெட்டு ஆடினால்..

வேண்டாம்

உந்தன் தொப்புள்கொடி உறவு..!

உடனடியாய்

தொடர்பறுப்பேன்

மானத் தமிழிச்சி

மைந்தன் இவன்..

எனி எந்நாளும்

உச்சரிக்கேன்

“இவன் உன் மைந்தன்” என்றே..!!

 

இது எந்தன் முடிவமல்ல

யாழ் இந்து அன்னையே…

மானத்தமிழன்

ஒவ்வொருவன் முடிவும் ஆகும்..!

 

jhc1.jpg

படங்கள்: jhc.lk

மறுமொழி அளிக்கவும் »