கிள்ளை மொழி பேசி
கிளிபோல் வந்தவளே..
கிறங்கடித்தே என்னை
கிள்ளினையே பார்வையால்.!
கிளாலிச் சமர்களம் போல்
கிடுங்குப்பிடியதில்
கிரமம் கூட சிரமமானதே..!
கிளை இரு குருவிக்கும் இணையிருக்கு
கிராமத்தவன் இவனுக்கோ..??!
கிள்ளையே
கிள்ளிப் போடு ஒரு வாழ்க்கை
கில்லாடி நானும்
கிழவனாகி வீழும் முன்..!
கினா கவி.
2 பதில்கள் இது வரை »
மறுமொழி RSS · வரு தொடுப்பு URI







nilaamathy சொன்னார்,
செப்டம்பர் 28, 2008 @ 7:59 பிற்பகல்
கிராமத்த்வன் இவனுக்கோ கிள்ளி போடு ஒரு வாழ்கை …..,கிழவனாகி விடு முன் நானும் ……….அருமையான் வரிகள் . தொடருங்கள் , நிலாமதி
kuruvikal சொன்னார்,
செப்டம்பர் 29, 2008 @ 9:42 பிற்பகல்
நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.